Home /News /coronavirus-latest-news /

ஊரடங்கின் நோக்கம், இலக்கு தோல்வியடைந்து விட்டது - ராகுல் காந்தி விமர்சனம்

ஊரடங்கின் நோக்கம், இலக்கு தோல்வியடைந்து விட்டது - ராகுல் காந்தி விமர்சனம்

ராகுல்காந்தி

ராகுல்காந்தி

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் மூலம் ஊடங்கும் உத்தரவின் இலக்கும் நோக்கமும் தோல்வியடைந்துவிட்டதாக ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்

  • News18
  • Last Updated :
    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி, ட்விட்டரில் காணொலி காட்சி மூலம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர், கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவை தளர்த்தும் ஒரே நாடு இந்தியா தான் என குற்றஞ்சாட்டியுள்ளார்.

    கொரோனா வைரஸை எதிர்த்து 21 நாட்கள் நாம் போராடப் போகிறோம் என பிரதமர் மோடி கூறிய நிலையில், தற்போது 60 நாட்கள் கடந்துவிட்டதாகவும், ஆனால், வைரஸ் தொற்று கட்டுக்கடங்காமல் பரவியிருப்பதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதன் மூலம் கொரோனா ஊரடங்கு உத்தரவின் இலக்கும், நோக்கமும் தோல்வியடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.  நான்கு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பிரதமர் மோடி எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை எனக் கூறியுள்ள ராகுல் காந்தி,  கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசிடம் உள்ள திட்டம் குறித்தும் கேள்வி எழுப்பினார்.

    இந்த ஊரடங்கு உத்தரவு தோல்வியடைந்துவிட்டது. 21 நாட்களில் இந்த தொற்றை தோற்கடிப்போம் என பிரதமர் மோடி கூறினார். 4 ஊரடங்கு உத்தரவுகள் போட்ட பிறகும் தொற்று குறையவில்லை. அதிகரித்தே வருகிறது.

    பிரதமர் மோடியும், அவரது ஆலோசகர்களும் கூறியவாறு கொரோனா பரவல் குறையவில்லை என்றும், நாளுக்கு நாள் அதிகரித்தே வருவதாகவும் குற்றஞ்சாட்டிய ராகுல் காந்தி, தற்போது ஊரடங்கு உத்தரவை தளர்த்துவதற்கு எடுத்துள்ள முடிவால் புலம்பெயர் தொழிலாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் மாநில அரசுகளுக்கும் எந்த வகையில் உதவி என்பது தெரியவில்லை என்றும் சந்தேகம் எழுப்பினார்.

    மாநில அரசுகளுக்கு மத்திய அரசு போதிய உதவி செய்யவில்லை என்ற அவர், விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் தேவையான பண உதவியை நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தாவிட்டால் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்தார்.  மேலும், நேபாளம் மற்றும் லடாக் எல்லைப் பகுதியில் நடந்தது குறித்து நாட்டு மக்களுக்கு தெளிவை ஏற்படுத்த வேண்டும் என்ற ராகுல் காந்தி,எல்லை பிரச்னையில் வெளிப்படைத்தன்மை தேவை என்றும் வலியுறுத்தினார்.








    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Published by:Sankar
    First published:

    Tags: CoronaVirus, Lockdown

    அடுத்த செய்தி