Rahul Gandhi : நாட்டு மக்களுக்கோ பேரழிவு, மோடியின் நண்பர்களுக்கோ கொண்டாட்டம்: தடுப்பூசி விலை குறித்து ராகுல் காந்தி காட்டம்

Rahul Gandhi : நாட்டு மக்களுக்கோ பேரழிவு, மோடியின் நண்பர்களுக்கோ கொண்டாட்டம்: தடுப்பூசி விலை குறித்து ராகுல் காந்தி காட்டம்

ராகுல் காந்தி

சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா சி.இ.ஓ. அதார் பூனாவாலாவை பிரதமர் நரேந்திர மோடியின் நண்பர் என்று ராகுல் காந்தி சாடியுள்ளார். மேலும் தன் ட்விட்டர் பக்கத்தில் நாடு முழுதும் நடந்து வரும் தடுப்பூசிப் பாகுபாடு பற்றியும் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

  • Share this:
    சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா சி.இ.ஓ. அதார் பூனாவாலாவை பிரதமர் நரேந்திர மோடியின் நண்பர் என்று ராகுல் காந்தி சாடியுள்ளார். மேலும் தன் ட்விட்டர் பக்கத்தில் நாடு முழுதும் நடந்து வரும் தடுப்பூசிப் பாகுபாடு பற்றியும் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

    நாட்டில் கொரோனா பெருந்தொற்றினால் மக்களுக்கோ அவதி சீரம் இன்ஸ்டிட்யூட் சி.இ.ஓ. பூனாவாலா போன்ற மோடியின் நண்பர்களுக்கோ கொண்டாட்டம் என்று ராகுல் காந்தி சாடியுள்ளார்.

    “நாட்டின் பேரழிவு நிலை பிரதமர் மோடியின் நண்பர்களுக்கு ஒரு நல்வாய்ப்பாக மாறியுள்ளது, இதுதான் மத்திய அரசின் அநீதி” என்று ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். அதாவது சீரன் இன்ஸ்டிட்யூட்டின் கொரோனா தடுப்பூசி விலைகள் பட்டியலை பகிர்ந்து ராகுல் காந்தி இவ்வாறு சாடியுள்ளார். பெருந்தொற்று காலத்திலும் சில நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்க பிரதமர் மோடி பாடுபடுகிறார் என்று சாடுகிறார் ராகுல் காந்தி.

    காங்கிரஸ் மூத்த தலைவரும் செய்தித் தொடர்பாளருமான ரந்தீப் சிங் சுர்ஜேவாலா தன் ட்விட்டர் பக்கத்தில், “மக்களின் துயரத்திலிருந்து முதலாளிகள் லாபம் பெறும் மோடி அரசின் புதிய திட்டம், மோடி அரசுக்கு கோவிஷீல்ட் விலை ரூ.150. மாநில அரசுகளுக்கோ ரூ.400, தனியார் மருத்துவமனைகளுக்கோ கோவிஷீல்ட் ரூ.600.

    ஒரு நாடு
    ஒரு வாக்சின்
    3 வித்தியாசமான விலைகள் என்று ஒருநாடு ஒரு மக்கள் என்ற பாஜகவின் கொள்கையை கடுமையாகக் கிண்டலடித்துள்ளார் சுர்ஜேவாலா.

    இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு 3 லட்சத்தைக் கடந்தது. ஒரே நாளில் 2,104 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

    நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,14,835 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,59,30,965 ஆக அதிகரித்துள்ளது.

    கரோனாவிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,78,841 பேர் தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதனால் மொத்தமாகக் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,34,54,880 என்றளவில் உள்ளது. தற்போது நாடு முழுவதும் 22,91,428 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

    இதுவரை கரோனாவுக்கு நாடு முழுவதும் 1,84,657 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,104 பேர் பலியாகினர்.

    இதுவரை மொத்தம் 13,23,30,644 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

    இதற்கிடையே மத்திய அரசுக்கு மக்கள் உயிரைக் காப்பதில் அக்கறையில்லையா? ஆக்சிஜன் தட்டுப்பாட்டை உடனடியாகப் போக்குங்கள், பிச்சை எடுங்கள், திருடுங்கள் ஆனால் மக்கள் உயிரைக் காப்பாற்றுங்கள் என்று புதன் இரவு உயர் நீதிமன்றம் மத்திய அரசு மீது காட்டமான விமர்சனம் வைத்துள்ளது.
    Published by:Muthukumar
    First published: