சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இதுதான் வழி...! சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் பேட்டி

"சென்னையைப் பொருத்த வரை கொரோனா எங்கிருந்து பரவுகிறது என்று போதிய ஆவணங்கள் இருக்கிறது”

  • Share this:
முககவசம் மட்டுமே சென்னையில் நோய்த்தொற்றை குறைக்கும் ஒரே வழி என கொரோனா கட்டுப்பாட்டு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை நொச்சிக்குப்பம் பகுதியில் உள்ள மீனவர்களுக்கு மாநகராட்சி சார்பில் முககவசம் வழங்கப்பட்டது. இதில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள தூய்மை பணிகளை ஆய்வு செய்த பின்னர் முகக் கவசங்களை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன், சென்னையில் இதுவரை ஆக்டிவ் கேஸ் 1461 பேர், 3791 பேர் இதுவரை முழுவதும் குணமாயிருக்கிறார்கள். 0.7 இறப்பு விகிதம் மட்டுமே உள்ளதாக கூறினார்.


திருவெற்றியூர், மணலி, அம்பத்தூர் பகுதிகளில் நோய்த் தாக்கம் குறைந்து வருவதாகவும், சவாலாக உள்ள ராயபுரம், திரு.வி.க நகர், சவுகார்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை, கோயம்பேடு போன்ற பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வீடுகளுக்கு சென்று கபசுரகுடிநீர் மாத்திரை முககவசம் வழங்கப்பட்டு வருவதாகவும் இன்று மட்டும் 3868 சோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், ராயபுரம் பகுதியில் 500 பேர் சமுதாய கூடத்திற்கு போதுமான உணவு வசதிகளுடன் மாற்றப்பட்டுள்ளதாகவும், சென்னையில் நோய்ப்பரவலை தடுக்க ஒரே வழி முகக் கவசம் மட்டுமே என்றும் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

பின்னர் பேசிய ஆணையர் பிரகாஷ், 1979 குடிசைப் பகுதிகளில் தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் முகக் கவசம் வழங்குதல் அடிப்படை ஒழுங்கை உருவாக்குதல், மாத்திரை, கபசுரக் குடிநீர் வழங்கும் பணிகள் நடந்து வருவதாகவும், காப்பகங்கள் மற்றும் வீடுகளில் உள்ள வயதானவர்களை (சென்னையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 8 லட்சம் பேர் உள்ளனர்) இவர்களுக்கு 4 நாட்களுக்கு ஒரு முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களது உடல்நிலை குறித்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்தார்.எங்கிருந்து பரவுகிறது என்று தெரியாத நிலையைதான் சமூகப் பரவல் என்று அழைக்கிறோம், சென்னையை பொருத்தவரை எங்கிருந்து பரவுகிறது என்று போதிய ஆவணங்கள் இருக்கிறது என்றார். மேலும், தொற்றுள்ளவர்களின் தொடர்பை அறிதலைப் பொருத்தவரை 24 மணி நேரத்திற்குள் செய்யப்பட்டு விடுவதாகவும், ஆணையர் பிரகாஷ் கூறினார்.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Also see...
First published: May 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading