வெளிநாட்டிலிருந்து வந்து பிறருடன் கிரிக்கெட் விளையாண்டவர் உட்பட 2,115 பேர் திருச்சியில் கைது!

வெளிநாட்டிலிருந்து வந்து பிறருடன் கிரிக்கெட் விளையாண்டவர் உட்பட 2,115 பேர் திருச்சியில் கைது!
கைது செய்யப்பட்டவர்
  • Share this:
எச்சரிக்கையையும் மீறி வெளிநாட்டில் இருந்து வந்து வீடு தங்காமல் வெளியில் சுற்றியவர் உட்பட திருச்சியில் 2,115 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீது காவல்துறை மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதன்படி மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட திருச்சி, புதுகை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 8 மாவட்டங்களில் 3வது நாளான நேற்று மட்டும் 344 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 428 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 180 இருசக்கர வாகனங்கள், 9 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


ஊரடங்குச் சட்டம் நடைமுறைக்கு வந்ததில் இருந்து தற்போது வரை மத்திய மண்டலத்தில் மொத்த. ஆயிரத்து 642 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2,115 பேர் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, திருச்சி மாவட்டம், முசிறியில் வெளிநாட்டிலிருந்து வந்து தனிமைப்படுத்தபட்டவர், விதிமுறைகளை மீறி பிறருடன் கிரிக்கெட் விளையாடி வெளியில் சுற்றி திரிந்ததால், மாவட்ட ஆட்சியர் உத்தரவுபடி அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் முசிறி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான தனிப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

 Also see...
First published: March 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading