ஒரு கோடியே 10 லட்சம் டோஸ் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி கொள்முதல்

ஒரு கோடியே 10 லட்சம் டோஸ் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி கொள்முதல்

கோவிஷீல்டு

இம்மாதம் 16ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்க இருக்கின்றது.

 • Share this:
  ஒரு கோடியே 10 லட்சம் டோஸ் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகளை முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு செலுத்துவதற்காக மத்திய அரசு கொள்முதல் செய்துள்ளது.

  கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகளை இந்தியாவில் பயன்படுத்த மருந்து தர கட்டுப்பாடு அமைப்பு அனுமதி அளித்துள்ள நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான 2 கட்ட ஒத்திகைகளும் நடந்து முடிந்துள்ளன. இம்மாதம் 16ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது.

  இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியை மத்திய அரசு கொள்முதல் செய்துள்ளது. இந்த தடுப்பூசியை இந்தியாவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்து வருகிறது. அந்நிறுவனத்திடம் ஒரு கோடியே 10 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கான ஆர்டரை மத்திய அரசு அளித்தது.

   

  மேலும் படிக்க..."மாஸ்டர்" பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ மீது எப்ஐஆர் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

   

  அதன்படி, ஒரு டோஸ் தடுப்பூசி விலை 200 ரூபாய் ஆகும். ஜிஎஸ்டியுடன் சேர்த்து 210 ரூபாய் என்ற விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, நேற்று மாலையே தடுப்பூசிகளை சீரம் நிறுவனம் அனுப்ப தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த தடுப்பூசிகள், முதலில் 60 வினியோக மையங்களுக்கு நேரடியாக கொண்டு செல்ல இருக்கின்றன. இந்நிலையில், கோவேக்சின் தடுப்பூசியை கொள்முதல் செய்வதற்கான ஆர்டர் விரைவில் பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

  இம்மாதம் 16ஆம் தேதி முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட இருப்பதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
  Published by:Suresh V
  First published: