Corona Vaccine : ஜூலை மாத இறுதிக்குள் 25 கோடி கொரோனா தடுப்பூசி கொள்முதல் : மத்திய அரசு திட்டம்

கொரோனா தடுப்பூசி

ஜூலை மாத இறுதிக்குள் மேலும் 25 கோடி கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Share this:
    ஜூலை மாத இறுதிக்குள் சுமார் 25 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, 12 கோடி கோவிஷீல்ட் தடுப்பூசிகளையும், மீத எண்ணிக்கைக்கு கோவாக்சின் மற்றும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் எனவும் கூறப்படுகிறது.

    அதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில், மேலும் 30 கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. பல்வேறு மாநிலங்களும் கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவுவதாக குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், தடுப்பூசிகள் தடையின்றி விநியோகிக்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கில், மத்திய அரசு கொள்முதல் பணியை தீவிரப்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் மத்திய அரசு என்ற காரணத்திற்காக எது சரி என்பதை நீங்கள் கூறக் கூடாது என, உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தடுப்பூசிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வெவ்வேறு விலை தொடர்பாக, தாமாக முன்வந்து நீதிமன்றம் விசாரித்தது. அப்போது, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசு தடுப்பூசியை இலவசமாக வழங்கும் என்பதையும், 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தடுப்பூசிகளுக்கு கட்டணம் எனவும், எதன் அடிப்படையில் நிர்ணயம் செய்தீர்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு வெவ்வேறு விலையை நிர்ணயிப்பதை ஏற்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், பிரமாணப் பத்திரங்கள் வேண்டாம் எனவும், அரசின் கொள்கை ஆவணங்களை சமர்ப்பியுங்கள் எனவும் அறிவுறுத்தினர். மேலும், தற்போதையை தடுப்பூசி கொள்கைகளில் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டு இருப்பதாகவும், அதனை திருத்தி இரண்டு வாரங்களுக்குள் சமர்பிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    இந்நிலையில், தமிழகத்தில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஜூன் 3 முதல் 5 வரை கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்படும் என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

    மாநிலத்தில் நிலவி வரும் கொரோனா தடுப்பூசி சூழல் குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷனுடன் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Must Read : 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு

    சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்.எஸ் வளாகத்தில் இருந்து காணொலி வாயிலாக சுகாதாரத்துறை அதிகாரிகள் ராஜேஷ் பூஷனுடன் கலந்துரையாடினர். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராதாகிருஷ்ணன், இம்மாதத்திற்கான ஒதுக்கீட்டில் எஞ்சியிருக்கும் ஒரு லட்சத்து 74 ஆயிரம் டோஸ்கள் விரைவில் வந்துவிடும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
    Published by:Suresh V
    First published: