புரசைவாக்கம் சரவணா ஸ்டோர் வணிக வளாகத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல்!

புரசைவாக்கம் சரவணா ஸ்டோர் வணிக வளாகத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல்!
  • Share this:
புரசைவாக்கம் சரவணா ஸ்டோர் வணிக வளாகத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல்! வைத்தனர்.

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு வணிக வளாகம், கேளிக்கை விடுதிகள், மால்கள், தியேட்டர்கள் ஆகியவற்றை வருகிற 31ம் தேதி வரை மூடச் சொல்லி உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் இன்று காலையிலிருந்து புரசைவாக்கத்தில் உள்ள சரவணா ஸ்டோர் எப்போதும் போல செயல்பட்டு வந்தது.

இதனையடுத்து இன்று மதியம் மாநகராட்சி அதிகாரிகள் நேரில் சென்று வணிக வளாகத்தை மூட சொல்லியுள்ளனர். அதன் பேரில் கடைதை மூடிய சரவணா ஸ்டோர் ஊழியர்கள் மாநகராட்சி அதிகாரிகள் சென்றபின் சரவணா ஸ்டோர் பொருள்கள் விற்பனைக்காக திறந்து வைத்தனர்.


தகவலறிந்த மாநகராட்சி மண்டல அதிகாரி மனோகரன் காவல்துறையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சரவணாஸ்டோர் வணிக வளாகத்துக்கு 7 மணியளவில் சீல் வைத்தனர்.
First published: March 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading