கொரோனா பயத்தில் தற்கொலை செய்த இளைஞர்... வைரஸ் தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவு..!

கொரோனா பயத்தில் தற்கொலை செய்த இளைஞர்... வைரஸ் தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவு..!
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: March 27, 2020, 3:07 PM IST
  • Share this:
கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அடைக்கப்பட்ட இளைஞர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன.

பஞ்சாப் மாநிலம் பாலாசூர் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் தேதி டெல்லி திரும்பியுள்ளார்.

இதனிடையே டெல்லியின் இந்திரா காந்தி விமான நிலையத்தில், அந்த இளைஞர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தபட்டுள்ளார். அவரைப் பரிசோதித்த அதிகாரிகள் சோதனையில் அந்த இளைஞருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதை உறுதி செய்துள்ளனர்.


இதையடுத்து டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் கடந்த 18-ம் தேதி இரவு 9 மணியளவில் சிகிச்சைக்காக கொரோனா சிறப்பு வார்டில் அந்த இளைஞர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்க பரிசோதனைக்கான மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.

பின்னர் திடீரென மருத்துவமனையின் 7-வது மாடிக்குச் சென்று அங்கிருந்து குதித்து அந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. குடும்பத்தினரும் அதிகாரிகள் செயலே காரணம் என்று குற்றம் சாட்டினர்.

இந்நிலையில், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன.


இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: March 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading