கடந்த ஆண்டு கொரோனா வைரஸின் முதலாம் அலை காலகட்டத்திலேயே பல்ஸ் ஆக்ஸிமீட்டர் பயன்பாடு அதிகரித்தது. அதுவரை இது என்ன மாதிரியான உபகரணம் என்றே அறிந்திராத ஏழை, எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினர், அதன் பயன்பாட்டை பற்றி தெரிந்து கொண்டது அப்போது தான். மருத்துவமனைகளில் மட்டுமே இருந்த பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கருவி, கொரோனா காலத்தில் வீடுகளிலும் ஒரு தவிர்க்க முடியாத மருத்துவ உபகரணமாக மாறியது. இந்த சூழலில் தான்
கொரோனா 2ம் அலை இந்தியாவை புரட்டிப் போட்டிருக்கும் நிலையில், பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கருவியின் பயன்பாடும் வெகுவாக அதிகரித்துள்ளது.
ஆனால், தமிழகத்தில் பல முக்கிய நகரங்களில் பல்ஸ் ஆக்ஸி மீட்டர் கருவி கிடைக்கவில்லை என்பது நமது செய்தியாளர்களின் கள ஆய்வில் அம்பலமானது. இதனிடையே, 2000 ரூபாய் கொடுத்தால் கூட முதல்தர பல்ஸ் ஆக்ஸி மீட்டர் கருவி கிடைக்காது என்று மருந்துக் கடை வைத்திருப்போர் கூறுவது கொஞ்சம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை போன்ற பெரிய நகரங்களில் பல்ஸ் ஆக்ஸி மீட்டர் கருவிக்கு தட்டுப்பாடு இல்லை என்றாலும், அதன் ஆரம்ப விலையே 2000க்கு மேல் என்ற நிலைதான் காணப்படுகிறது.
பல்ஸ் ஆக்ஸி மீட்டர் கருவியை பொருத்தவரை எந்த பிராண்ட் தரமானது என்ற விழிப்புணர்வும் வெகுஜன மக்களிடையே இல்லாத காரணத்தால், எந்த விலை கொடுத்து வாங்குவது என்ற குழப்பமும் நிலவுகிறது.
தமிழகத்தில் பல்ஸ் ஆக்ஸி மீட்டர் கருவிக்கு பற்றாக்குறை நிலவுகிறதா? அல்லது செயற்கையாக உருவாக்கப்பட்ட தட்டுப்பாடா? என்பதை அறிய சென்னையின் ஒட்டுமொத்த மருத்து விற்பனையாளர் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியத்தை எமது செய்தியாளர் சந்தித்து கேள்வி கேட்டதற்கு பதிலளித்தவர், “ இந்த கொரோனா காலகட்டத்தில்
பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கருவியை ஒவ்வொரு வீட்டிலும் வைத்திருக்க வேண்டியது அவசியமில்லை என்றும், மக்கள் அதிகளவில் வாங்கிய காரணத்தாலேயே அதன் விலை ஏறியிருப்பதாகவும் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.
மேலும் படிக்க...
செம்மஞ்சேரியில் சர்ச்சையை ஏற்படுத்திய 2 உயிரிழப்புகள்...
இதனிடையே, இ-காமர்ஸ் எனப்படும் ஆன்லைன் வர்த்தகத்திலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பல்ஸ் ஆக்ஸி மீட்டரின் விலை உயர்ந்து இருக்கிறது. அங்கும் கூட ஒரு சில மாடல்கள் மட்டுமே தற்போது உடனடியாக டெலிவரி செய்யக் கூடிய வகையில் இருப்பதாகவும், பல மாடல்கள் தற்போது ஸ்டாக் இல்லை என்ற நிலையே காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.