6 பேருக்கு கொரோனா எதிரொலி - மூடப்பட்ட புதுச்சேரி பெரிய மார்க்கெட்

புதுச்சேரி பெரிய மார்க்கெட் உள்ள பகுதியில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் எதிரொலியாக அது 48 மணி நேரத்திற்கு மூடப்பட்டது.

6 பேருக்கு கொரோனா எதிரொலி - மூடப்பட்ட புதுச்சேரி பெரிய மார்க்கெட்
மார்கெட் பகுதியில் அரசு அதிகாரிகள்.
  • Share this:
புதுச்சேரியில் நகரின் மையப் பகுதியில் நேரு வீதி - காந்தி வீதி சந்திப்பில் குபேர் அங்காடி என்கிற பெரிய மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு மளிகை கடைகள், காய்கறி கடைகள், மீன் கடைகள், துணிக் கடைகள் என 800-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இப்பகுதியில் 6 பேருக்கு இன்று கொரோனா  நோய்த்தொற்று ஏற்பட்டு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதனை அடுத்து நோய் பரப்பும் பகுதியாக குபேர் அங்காடி விளங்குவதாக அறிவித்து உடனடியாக அதை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதனடிப்படையில் புதுச்சேரி நகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து வியாபாரிகளை உடனடியாக கடைகளை மூட உத்தரவிட்டனர்.

Also read: புதுச்சேரியில் அறுந்துக் கிடந்த மின் கம்பியில் சிக்கி 4 மாடுகள் உயிரிழப்பு


இன்று மூடப்படும் கடைகளில் 48 மணி நேரத்துக்கு பிறகுதான் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த 48 மணி நேரத்தில் கிருமிநாசினி அனைத்துக் கடைகளுக்கும் தெளிக்கப்படும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் அதன் பிறகுதான் சனிக்கிழமை கடைகள் திறக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளையில் நகராட்சியில் நடவடிக்கையை வியாபாரிகள் ஆதரவு தெரிவித்தாலும் குறுகிய கால அவகாசத்தில்  கடைகளை மூடுவது கஷ்டமான விஷயம். இருப்பினும் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து கடைகளை மூடுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பெரிய மார்க்கெட்டின் அனைத்துக் கடைகளும்  13 நுழைவு வாயில்களும் மூடப்பட்டன.
First published: July 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading