புதுக்கோட்டை, கொடைக்கானலிலும் தளர்வில்லா ஊரடங்கு - கொரோனாவை தடுக்க நகராட்சிகள் அதிரடி முடிவு

கோப்புப்படம்

கொரோனாவைத் தடுக்க புதுக்கோட்டை மற்றும் கொடைக்கானலில் தளர்வில்லா ஊரடங்கு என மாவட்ட நகராட்சி நிர்வாகங்கள் அதிரடியாக அறிவித்துள்ளன.

 • Share this:
  புதுக்கோட்டை நகரில் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் விதமாக வரும் 24ம் தேதி முதல் 31ம் தேதி வரை தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. இதுவரை 1,100-க்கும் மேற்பட்டோர் அங்கு பாதிக்கப்பட்டுள்ளனர், இதையடுத்து ஆலங்குடி மற்றும் கறம்பக்குடியில் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளை திறக்கும் நேரத்தை குறைத்துக்கொண்டனர்.

  Also read: டீசல் மானியத்தை ரத்து செய்வதற்கு கண்டனம் - காரைக்கால் மீனவர்கள் இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டம்

  இந்நிலையில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வணிகர்களுடன் நடந்த கூட்டத்தில் முழுஊரடங்கை அமல்படுத்த முடிவெடுக்கப்பட்டது. இதேபோல், கொரோனாவைக் கட்டுப்படுத்த கொடைக்கானலில் நாளை (ஜூலை 23) முதல் 29ம் தேதி வரை ஒருவார காலத்துக்கு முழு ஊரடங்கு அமலாகிறது. பால் மற்றும் மருந்துக்கடைகள் மட்டுமே இந்த நாட்களில் திறந்திருக்கும் என்று புதுக்கோட்டை மற்றும் கொடைக்கானல் நகராட்சிகள் அறிவித்துள்ளன.
  Published by:Rizwan
  First published: