• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • ”உணவுக்கே வழியின்றி தவிக்கிறோம்” - ஏற்றுமதி சிறப்புள்ள சிலைகளைச் செய்யும் மண்பாண்ட கலைஞர்கள் வேதனை..

”உணவுக்கே வழியின்றி தவிக்கிறோம்” - ஏற்றுமதி சிறப்புள்ள சிலைகளைச் செய்யும் மண்பாண்ட கலைஞர்கள் வேதனை..

ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மண்பாண்ட தொழிலாளர்கள்

ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மண்பாண்ட தொழிலாளர்கள்

16 நாடுகளுக்கு மேல் தாங்கள் செய்யும் கைவினைப் பொருட்களை ஏற்றுமதி செய்து வந்த புதுக்கோட்டை மாவட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர்.

  • Share this:
புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் பகுதியில் காலம் காலமாக மண்பாண்ட பொருட்கள் மற்றும் மண் சிலைகள் தயாரிக்கும் மண்பாண்ட கலைஞர்கள் 70-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் வீடுகளுக்குத் தேவைப்படும் பானை முதல் சுவாமி சிலைகள், குதிரை சிலை, யானை சிலை போன்ற அலங்கார சிலைகளை களிமண்ணால் செய்து வண்ணம் தீட்டி விற்பனை செய்து வருகின்றனர்.

இவர்களது திறமை கடல்தாண்டி அமெரிக்கா, ஜப்பான் தைவான், கொரியா, மலேசியா,  சிங்கப்பூர், இலங்கை  உட்பட 16 நாடுகளுக்கு மேல் சென்றுள்ளது. மேலும் பல்வேறு நாடுகளுக்கு களிமண்ணால் உருவாக்கப்பட்ட மண் சிலைகளை அனுப்பியுள்ளனர். மேலும் இங்கு உள்ள தொழிலாளர்கள் பல்வேறு நாடுகளுக்கு சென்று அங்குள்ளவர்களுக்கு பிடித்தமான சிலைகளை அங்கேயே வடிவமைத்துக் கொடுத்துள்ளனர்.



அதேபோல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் இவர்களது தயாரிப்புகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்திக்கு மழையூர் பகுதியிலிருந்து விநாயகர் சிலைகள் அதிகளவில் எடுத்துச்செல்லப்படும்.

கற்பக விநாயகர், சிங்க விநாயகர் , ஜல்லிக்கட்டு விநாயகர் சித்தி விநாயகர், மூஞ்சுறு வாகன விநாயகர் என பல்வேறு விதமான  சிலை செய்து வந்தவர்கள் காலத்திற்கு தகுந்தவாறு தற்போது குதிரையில் செல்லும் விநாயகர் யானைகள் செல்லும் விநாயகர், இருசக்கர வாகனம் ஓட்டும் விநாயகர் என புதுவிதமான சிலைகளை கண் கவரும் வகையில் செய்துவந்தனர்.



இந்த சிலைகள் 5,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை   விற்பனை  செய்யப்படும், இந்நிலையில் இந்தாண்டு கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் விநாயகர் சதுர்த்திக்கு இதுவரை ஒரு சிலரைத் தவிர வேறு யாரும் விநாயகர் சிலை தயாரிப்பில் ஈடுபடவில்லை மேலும் இதுபோல் எந்த ஆண்டும் விநாயகர் சிலை தயாரிக்காமல் இருந்ததில்லை என வேதனையுடன் மண்பாண்ட கலைஞர்கள் தெரிவிக்கின்றனர்.



 இது குறித்து மண்பாண்ட கலைஞர்கள் கூறுகையில், "மலையூர் பகுதியில் காலம் காலமாக மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகின்றோம் இங்கு 50 முதல் 70 குடும்பங்கள் இந்த தொழிலை மட்டுமே நம்பி உள்ளது. இந்த தொழிலை தவிர வேறு எந்த தொழிலும் எங்களுக்கு தெரியாது. இதில் வரும் வருமானத்தை வைத்தே தங்களது வாழ்க்கையை நகர்த்தி வந்தோம். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளுக்கும் தங்களது கைவினை பொருட்களை ஏற்றுமதி செய்து வந்த நாங்கள் தற்போது வீட்டுக்குள் முடங்கி கிடக்கக்கூடிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம், மேலும் கடந்த 5 மாதங்களாக செய்த சிலைகள் விற்பனை செய்ய முடியாமல் வீட்டுக்குள் அடுக்கி வைத்துள்ளோம். எங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் தங்கள் பகுதியில் தமிழக அரசு தொழில் கூடம் அமைத்து தருவதாக தெரிவித்திருந்தது. ஆனால் இதுநாள் வரை அந்த தொழில்நுட்ப கூடத்தை முழுமையாக அமைத்துத் தரவில்லை. மேலும் மழைக்காலத்தில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட கூடிய 5000 ரூபாய் நிதியும் எங்கள் கிராமத்தில் உள்ள மண்பாண்ட தொழிலாளர்கள் யாருக்குமே கிடைக்கவில்லை. இதனால் பெரிதும் பாதிப்படைந்துள்ளோம்.

மேலும் படிக்க...

பதினெட்டாம்படி கருப்பணசுவாமி சன்னதி கதவுகளுக்கு எளிமையான முறையில் சந்தன சாத்துப்படி..

உணவிற்கே வழியின்றி தவித்து வருகிறோம். எங்கள் நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு தங்கள் பகுதியில் அனுப்புவதாக கூறிய தொழில்நுட்பத்தை முழுமையாக அமைத்துத் தரவேண்டும். மழைகால நிவாரண நிதியாக 5,000 ரூபாயை அனைவருக்கும் கிடைக்கும்படி செய்ய வேண்டும். மேலும் தற்போது பாதிக்கப்பட்டுள்ள மண்பாண்ட தொழிலாளர்களுக்கு போதிய உதவிகளை தமிழக அரசு செய்ய முன்வரவேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: