ஸ்டாலின் உத்தரவை செயல்படுத்தும் புதுச்சேரி எம்.எல்.ஏ!

ஸ்டாலின் உத்தரவை செயல்படுத்தும் புதுச்சேரி எம்.எல்.ஏ!
  • Share this:
புதுச்சேரியில் ஸ்டாலின் உத்தரவு படி, கூலித் தொழிலாளர்கள், துப்புரவுப் பணியாளர்களுக்கு திமுக அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ நிவாரண பொருட்களை வழங்கினார்.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவால் கடந்த 15 நாட்களாக மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து வீட்டில் முடங்கிவுள்ளனர்.

மேலும் தினக்கூலி தொழிலாளர்கள் மிகவும் அவதிவுற்று வருகின்றனர். அப்படி பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தங்களால் முடிந்த நிவாரண உதவிகளை செய்யுமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  மாவட்ட கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.


இதன்படி  புதுச்சேரியில் திமுகவினர் பல்வேறு நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கூலித் தொழிலாளர்கள், துப்புரவுப் பணியாளர்களை தேடி சென்று திமுக அமைப்பாளர் சிவா எம்எல்ஏ நிவாரண பொருட்களை வழங்கினார்.

மேலும் தனது  உருளையன்பேட்டை தொகுதியை சேர்ந்த 11,802 குடும்பங்களுக்கு பல்வேறு நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணியை அவர் நேற்று துவக்கினார். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள  தொகுதி மக்களுக்கு இலவசமாக அரிசி, காய்கறி, முக கவசம், சானிடைசர், கபசுரகுடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இதில் அடங்கும்.

கண்டாக்டர் தோட்டம், குபேர் நகர், கோவிந்தசாலை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வீடு, வீடாக சென்று அவர் நிவாரண பொருட்களை வழங்கினார்.இதனைத் தொடர்ந்து சின்னப்பொய்கை, கென்னடி நகர், திடீர் நகர், உருளையன்பேட்டை பேட், ராஜா நகர், முத்தமிழ் நகர், இளங்கோ நகர், சாந்தி நகர், சாரதி, நகர் உள்ளிட்ட தொகுதி முழுவதும் வசிக்கும் 11 ஆயிரத்து 802 குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது.

Also see...சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: April 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading