கொரோனா பாதிப்பு 6000 ஆயிரத்தை தாண்டும் - புதுச்சேரி அமைச்சர் எச்சரிக்கை

புதுச்சேரியில் வாரத்தில் ஒரு நாள் முழு ஊரடங்கை மக்களும் வியாபாரிகளிலும் விரும்பி கொண்டு வந்தால் மாதத்தில் 4 நாட்கள் நோய் பரவலை தடுக்க முடியும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்

கொரோனா பாதிப்பு 6000 ஆயிரத்தை தாண்டும் - புதுச்சேரி அமைச்சர் எச்சரிக்கை
சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்
  • News18
  • Last Updated: July 27, 2020, 10:08 AM IST
  • Share this:
புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்   கதிர்காமத்தில் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் அமைந்துள்ள கோவிட் மருத்துவமனையை  ஆய்வு செய்தார்.

அதிகாரிகளுடன் நேரில் சென்று அங்கு பரிசோதனைக்காக காத்திருந்த நோயாளிகளை சந்தித்து, அவர்களது குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது, பரிசோதனைக்காக நோயாளிகளைக் காத்திருக்க வைக்காமல் விரைந்து பரிசோதனையை  முடிக்க மருத்துவ அதிகாரிகளிடம் அமைச்சர் அறிவுறுத்தினார்.

சுத்தமான முறையில் மருத்துவமனை வாளாகத்தை பராமரித்து வரும் அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார், உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி சைமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்து வரும் வாரங்களில் தினமும் 200 பேர் பாதிக்கப்படுவார்கள். ஆகஸ்ட் மாத இறுதியில் நோய் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டும் என எச்சரித்தார்.

படிக்க: கொரோனா உறுதியான 3,338 பேரைக் கண்டறிய முடியாமல் திணறும் பெங்களூரூ மாநகராட்சி

படிக்க: சென்னையில் கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி - தற்கொலை என நாடகமாடியது அம்பலம்படிக்க: நானும், 82 வயது எனது தந்தையும் கொரோனாவிலிருந்து மீண்டது இந்த மாத்திரையால்தான் - அனுபவம் பகிரும் விஷால் வீடியோ

இதனால் புதுச்சேரியில் 2000 படுக்கை வசதிகள் தேவை. இதற்காக தனியார் ஓட்டல்கள், அரசு மாணவர் விடுதிகளை அரசு எடுத்துக் கொள்ளும் என்றும் புதுச்சேரியில் வாரத்தில் ஒரு நாள் முழு ஊரடங்கை மக்களும் வியாபாரிகளிலும் விரும்பி கொண்டு வந்தால் மாதத்தில் 4 நாட்கள் நோய் பரவலை தடுக்க முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.
First published: July 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading