• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • புதுச்சேரியில் இன்று மட்டும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரியில் இன்று மட்டும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கோப்புப்படம்

கோப்புப்படம்

புதுச்சேரியில் இன்று மட்டும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

  • Share this:
கொரோனா நோய் தாக்கம் உலகம் முழுவதும் கடுமையாக இருக்கும் சூழலில், புதுச்சேரியில் முன்னெச்சரிக்கையாக கடந்த மார்ச் 19ம் தேதியே மக்கள் கூடும் இடங்களான கடற்கரை சாலை, பூங்காக்கள், சுற்றுலாத் தலங்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவை மூடப்பட்டன.

இதனால் இரு மாதங்களாய் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் இருந்தது. ஊரடங்கு தளர்வால் மக்கள் நடமாட்டம் அதிகமாகி நோய் பாதிப்பவர்களின் எண்ணிக்கை தினமும் 10 என படிப்படியாக அதிகரித்து, இன்று மொத்த பாதிப்பு 194ஆக உயர்ந்துள்ளது.

Also see:

இன்று மட்டும் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வளவு பாதிப்பு என்பது இதுவே முதல்முறை. தற்போது சிகிச்சையில் 99 பேரும், குணமடைந்து வீடு திரும்பியோர் 91 பேரும், இறந்தவர்கள் 4 பேரும் என சுகாதாரத் துறை புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது.

புதுச்சேரியில் கடந்த 10 நாட்களாக நோய்த் தொற்று அதிகமாவதால் பொது மக்கள் கடுமையான விரதம் இருக்க வேண்டும். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் நடமாட்டம் அதிகமாகிறது. நிலவேம்பு, கபசர குடிநீர், ஹார்சினி ஹோமியோபதி மாத்திரை ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். சுய ஊரடங்கு இருந்தால் மட்டுமே நோயைத் தடுக்க முடியும் என சுகாதார துறை இயக்குநர் மோகன்குமார் அறிவுறுத்தியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: