90 சதவீத தொழிற்சாலைகளை இயக்க நடவடிக்கை:புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி!

தேவைப்பட்டால் அரசு ஊழியர்களை கொரோனா தடுப்பு பணிகளில் பயன்படுத்தி கொள்ளலாம் எனவும், கொரோனா பரவாமல் இருக்க பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியில் வரக்கூடாது என்றும் தெரிவித்தார்.

90 சதவீத தொழிற்சாலைகளை இயக்க நடவடிக்கை:புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி!
முதல்வர் நாராயணசாமி
  • Share this:
புதுச்சேரியில் 90 சதவீத தொழிற்சாலைகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 6 பேர் இந்திரா காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்கள் உடல் நலம் தேறி வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் வரும் 20ஆம் தேதிக்கு பிறகு பல்வேறு தளர்வுகளை செய்ய மத்திய அரசு சில வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது என்றும், அதன்மூலம் வரும் 20ஆம் தேதிக்கு பிறகு புதுச்சேரியில் உள்ள 90 சதவீத தொழிற்சாலைகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.


அதனைத் தொடர்ந்து பேசியவர்,  இது குறித்து தொழில்துறை அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோர் இணைந்து விரைவில் முடிவு எடுப்பார்கள் என்று அவர்  தெரிவித்தார். கார்பெண்டர், பிளம்பர், பெயிண்டர் இப்படி பல்வேறு தொழில் செய்பவர்கள் 20-ஆம் தேதிக்குப் பிறகு தொழிலை செய்யலாம் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் இவர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்க வேண்டிய கடைகள் திறக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

அதனால் இது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் நகரப்பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் 3 கிலோமீட்டர் அளவிலும், கிராமப்பகுதிகளில் 5 கிலோமீட்டர் அளவிலும் இருக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி பார்த்தால் சிறிய மாநிலமான புதுச்சேரியில் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக மாற வேண்டிய நிலை ஏற்படும் என்றும் இது குறித்து மத்திய அமைச்சரவை செயலாளரிடம் தான் பேசியதாகவும், மாநிலத்தில் அதற்கான முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்ற வகையில் அவர் தெரிவித்துள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.மேலும், அரசுத் துறைகள் அனைத்தும் முழுமையாக செயல்பட வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி 16-ஆம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் செயல்பட வைக்க வேண்டும். அத்துடன் தலைமைச் செயலாளருடன் பேசி அரசு அலுவலகங்கள் முழுமையாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.  தேவைப்பட்டால் அரசு ஊழியர்களை கொரோனா தடுப்பு பணிகளில் பயன்படுத்தி கொள்ளலாம் எனவும், கொரோனா பரவாமல் இருக்க பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியில் வரக்கூடாது என்றும் தெரிவித்தார்.

மேலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், அப்படி கடைபிடித்தால் கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து தங்களை  பாதுகாத்துக்கொள்ள முடியும் எனவும் முதல்வர் நாராயணசாமி தனது வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Also see...சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: April 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading