• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • வீட்டைவிட்டு வெளியே வந்தால் ஒருவருட சிறை தண்டனை...முதல்வர் நாராயணசாமி எச்சரிக்கை...

வீட்டைவிட்டு வெளியே வந்தால் ஒருவருட சிறை தண்டனை...முதல்வர் நாராயணசாமி எச்சரிக்கை...

தடையை மீறி  தனியார் நிறுவனங்கள் திறந்தால் சீல் வைக்கப்படும்,

  • Share this:
    ஊரடங்கு உத்தரவால் மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம், அப்படி தடை சட்டத்தை மீறி வருபவர்களுக்கு  1 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி எச்சரித்துள்ளார்.

    கொரோனா வைரஸ் நோய் எதிர்கொள்வது தொடர்பாக முதல்வர்  நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள் அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் சட்டமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்றது.

    அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊரடங்கு உத்தரவால் மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்று கூறியும் பொது மக்கள் அலட்சியமாக உ‌ள்ளன‌ர். தடை சட்டத்தை மீறுபவர்களுக்கு  1 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்தார்.

    தடையை மீறி  தனியார் நிறுவனங்கள் திறந்தால் சீல் வைக்கப்படும் என  எச்சரித்த முதல்வர் நாராயணசாமி ,பால் மற்றும் மருந்துகடைகளை தவிர மற்ற கடைகள் நாளை முத‌ல்  மூடப்படும். மீறினால் கைது செயல்படுவார்கள் என்றும் கூறினார்.

    புதுச்சேரியில் மக்கள் வெளியே வராமல் தடுப்பதற்கு தேவைப்பட்டால் துணை ராணுவப் படை உதவி கோரப்படும் என்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

    Also see... 





    இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: