நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்தார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி!

செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் அருண், புதுச்சேரியில் கொரோனா பாதிப்பால் 3 பேர் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர்.மொத்தம் 8 பேர் பாதிக்கப்பட்டனர். 4 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்.

நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்தார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி!
முதல்வர் நாராயணசாமி
  • Share this:
கொரோனா நிவாரண நிதியாக நடிகர் விஜய் புதுச்சேரி அரசுக்கு ரூபாய் 5 லட்சம் வழங்கியதற்கு அம்மாநில முதல்வர் நாராயணசாமி நன்றி தெரிவித்துள்ளார். 

இது பற்றி அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தற்போது புதுச்சேரியை பொருத்தவரை 2800க்கும் குறைவானவர்களே வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பரிசோதனை செய்த பின்னர் பத்திரிக்கையாளர்களுக்கும் கொரோனா சோதனை நடத்தப்படும். மருத்துவர்களை பாதுகாப்பது அரசின் கடமையாகும். தமிழகத்தில் மருத்துவர்கள் தாக்கப்பட்டது, அடக்கம் செய்யவிடாமல் தடுப்பது கண்டனத்துக்குரியதாகும்.

இப்பிரச்சினைக்கு முடிவுக்கட்ட மத்திய அரசு 7 ஆண்டு சிறை தண்டனை என அறிவித்துள்ளது. இதனை புதுச்சேரி அரசு வரவேற்கிறது என்றார்.


அதனைத் தொடர்ந்து வீடியோவில் பேசியவர், நடிகர் விஜய் கொரோனா நிதியாக புதுச்சேரிக்கு  5 லட்ச ரூபாய் வழங்கியுள்ளார். அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்று மற்ற நடிகர், நடிகைகளும் புதுச்சேரி மாநில மக்களுக்கு உதவ வேண்டும் என்றும் முதல்வர் நாராயணசாமி கேட்டுக்கொண்டார்.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் அருண், புதுச்சேரியில் கொரோனா பாதிப்பால் 3 பேர் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர்.மொத்தம் 8 பேர் பாதிக்கப்பட்டனர். 4 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்.

மாகி பகுதியை சேர்ந்த 71 வயது மிக்கவர் மரணமடைந்தார். தற்போது மீதமுள்ள 3 பேர்  சிகிச்சை பெறுகின்றனர். அவர்களும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தார்.  ஊடரங்கில் விதிகளை மீறி செயல்பட்டதாக இதுவரை 38 மதுபான  கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 66 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கை மீறியதாக 2,637 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 15,566 வாகனங்கள் பறிமுதல் செய்து சாலையில் தேவையின்றி சுற்றிய 1126 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.மேலும் நேற்று (22ம் தேதி) ஒரு நாள் மட்டும் 45 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 139 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருண் தெரிவித்தார்.

Also see...Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
First published: April 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading