புதுச்சேரி மக்கள் கொரோனாவுடன் வாழ்ந்தாக வேண்டும் - முதல்வர் நாராயணசாமி

2021 ஜனவரி மாதம் வரை கொரோனாவுடன் வாழ்ந்தாக வேண்டும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி மக்கள் கொரோனாவுடன் வாழ்ந்தாக வேண்டும் - முதல்வர் நாராயணசாமி
புதுவை முதல்வர் நாராயணசாமி.
  • News18
  • Last Updated: August 14, 2020, 5:44 PM IST
  • Share this:
புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு வீடியோ பதிவு மூலம் பேட்டி அளித்த முதல்வர் நாராயணசாமி கூறுகையில், புதுச்சேரியில்  கொரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து 10 நாட்களாக அதிகரித்து வந்தது. நேற்று முன்தினம் உச்சக்கட்டமாக 486 பேர் பாதிக்கப்பட்டனர். தற்போது அது குறைந்து இன்று 328 பேராக உள்ளது. நம்முடைய மாநிலத்தில் குணமடைந்து சென்றவர்களின் விகிதம் 57 சதவீதத்தை தாண்டியுள்ளது.

புதுச்சேரியில் 106 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இறப்பு விகிதம் 1.57 சதவீதமாகும். அகில இந்திய அளவில் உயிரிழப்பு எண்ணிக்கை 2.1 சதவீதம். மக்களுக்கு பரிசோதனை செய்வதில் இந்தியாவில் புதுச்சேரி முதல் மாநிலமாக இருக்கிறது என தெரிவித்தார்.

Also read... பதஞ்சலி நிறுவனத்துக்கு ₹ 10 லட்சம் அபராதம் விதித்த உத்தரவு நிறுத்தி வைப்பு


கொரோனா நோய்க்கு மருந்து  ஜனவரி மாதத்திற்கு பிறகு தான்  கிடைக்கும். அது வரை நோய் இந்தியாவில் பரவும்  என்று விஞ்ஞானி சவுமியா சாமிநாதன் அரசிடம் கூறியுள்ளார்.இதனால், புதுச்சேரி மக்கள் கொரோனாவுடன் வாழ்ந்துதான் ஆகவேண்டும். அரசையோ மருத்துவர்களையோ குறை கூறி பலன் இல்லை. எனவே மக்கள் தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மக்களுக்கு தான் பொறுப்பு வேண்டும் என அறிவுறுத்தினார்.
First published: August 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading