கொரோனா சிகிச்சைக்காக 10 ஆயிரம் படுக்கைகள் உருவாக்க நடவடிக்கை - முதல்வர் நாராயணசாமி தகவல்

புதுச்சேரியில் கொரோனா சிகிச்சைக்காக 10 ஆயிரம் படுக்கைகள் உருவாக்குவதற்கான நடவடிக்கையை எடுத்து வருவதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

கொரோனா சிகிச்சைக்காக 10 ஆயிரம் படுக்கைகள் உருவாக்க நடவடிக்கை - முதல்வர் நாராயணசாமி தகவல்
முதல்வர் நாராயணசாமி
  • Share this:
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி விடுத்துள்ள வீடியோ பதிவில், “புதுச்சேரியில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் மருத்துவத்துறையின் வேலை பளு அதிகரித்து கொண்டிருக்கிறது. நோயாளிகள் அதிகமாக வருவதால் தேவைப்படுகின்ற ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது.

இதன் காரணமாக, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களை நியமிக்க கோப்புகளை தயார் செய்து அனுப்பினார். நானும் அதற்கு உத்தரவிட்டுள்ளேன். வெகு விரைவில் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

புதுச்சேரியில் ஜிப்மரில் 1000 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் 250 - 300 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. அரசு மருத்துவ கல்லூரியில் 600 பேர், ஜிப்மரில் 100 பேர், காரைக்கால், மாஹே, ஏனாமில் தேவைக்கேற்ப மருத்துவ பரிசோதனை செய்வதற்கான உபகரணங்கள் ஒரு வாரத்தில் வாங்கப்பட்டு அந்தந்த பகுதிகளில் பரிசோதனையை ஆரம்பிப்போம்” என்று முதல்வர் கூறியுள்ளார்.


அதனை தொடர்ந்து பேசியவர், “தனியார் மருத்துவ கல்லூரிகள் நமக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.  ஒவ்வொரு மருத்துவ கல்லூரியும் சுமார் 700 பேருக்கு பரிசோதனை செய்வதற்கான மையத்தை அமைக்க வேண்டும். இதன் மூலம் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 1,500 முதல் 2000 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய  அரசு ஏற்பாடு செய்து வருகிறது புதுச்சேரி அரசு.

புதுச்சேரியில் அரசு மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி, ஜிப்மர் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒட்டுமொத்தமாக 10,000 படுக்கைகள் உருவாக்குவதற்கான நடவடிக்கையை எடுக்கிறோம். தேவைப்பட்டால் தனியார் ஓட்டல்களிலும் கொரோனா தொற்று உள்ளவர்களை தங்க வைப்பதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

மேலும்படிக்க...மாநிலத்திற்கு மாநிலம் திமுக தலைவர் ஸ்டாலின் இரட்டை வேடம் - புதுச்சேரி அதிமுக தலைவர் குற்றச்சாட்டுமேலும் ”மருத்துவ பரிசோதனை செய்வதற்கான ஆர்டி-பிசிஆர் கிட்டுகள், 15 நிமிடம், 30 நிமிடங்களில் முடிவு கிடைப்பதற்கான கிட்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வாங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மத்திய அரசில் இருந்து 50க்கும் மேற்பட்ட வெண்டிலேட்டர்கள் நம்முடைய அரசுக்கு கொடுக்கப்பட்டுள்ளது”எனவும் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
First published: July 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading