இன்று இரவு 9 மணிக்கு டார்ச் அடிக்க புதுவை முதல்வர் அழைப்பு..!

டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களுடன் தொடர்பில் உள்ள இடங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு 9 மணிக்கு டார்ச் அடிக்க புதுவை முதல்வர் அழைப்பு..!
டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களுடன் தொடர்பில் உள்ள இடங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
  • Share this:
பிரதமர் வைத்த கோரிக்கையின் படி புதுச்சேரியிலும் இன்று விளக்குகளை அணைக்க முதல்வர் முதல்வர் நாராயணசாமி அழைப்பு விடுத்துள்ளார். 

இது தொடர்பாக அவர் செய்தியாளர்காளுக்கு அளித்த பேட்டியில், பிரதமர் வைத்த கோரிக்கையின் படி பொதுமக்கள் தங்களது வீடுகளில் இன்று  இரவு 9 மணி முதல் 9.09 மணி வரை விளக்கை அணைத்து விளக்கு அல்லது டார்ச் ஏந்திட வேண்டும்.
அதனை முழுமையாக புதுச்சேரி மக்கள் கடைபிடிக்க வேண்டும் என கூறினார்.


புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 4 பேரின் உடல்நிலை தேறி வருகிறது. வெளிநாட்டில் இருந்து புதுச்சேரிக்கு வந்த 3,000 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

2-வது கட்டமாக சந்தேகப்படும் நபர்களிடமிருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகள் இன்னும் நான்கு தினங்களுக்குள் ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பப்படும். அதன்பிறகு மருத்துவ பரிசோதனை முடிவு தெரிய வரும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.

மேலும் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களுடன் தொடர்பில் உள்ள இடங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டுள்ளது. அப்பகுதி மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.அதனைத் தொடர்ந்து பேசியவர், மார்க்கெட்டுகளில் மக்கள் சமூக இடைவெளி விட்டு காய்கறி வாங்கி செல்கின்றனர். இதன் மூலம் கொரோனா தொற்று பரவுவதை தடுத்து நிறுத்த முடியும். சில்லறை கடைகளில் அதிக விலைக்கு காய்கறிகளை விற்பனை செய்வதாக புகார் வந்தது.

குறிப்பாக தட்டாஞ்சாவடி எஸ்பிஐ வங்கி எதிரே உள்ள கடையில் ஒரு கிலோ கேரட் ரூ.60க்கு விற்பனை செய்வதாக புகார் வந்தது. அங்கு சென்று ஆய்வு செய்து, விலை பட்டியலை கண்டிப்பாக வைக்குமாறு அறிவுறுத்திவிட்டு வந்துள்ளோம் என்றார்.

மேலும்  யாராவது அதிக விலைக்கு காய்கறி, பழங்கள், மளிகை பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விற்பனை உரிமமும் ரத்து செய்யப்படும் என எச்சரித்தார். விவசாயம் செய்பவர்களுக்கு எந்த தொல்லையும் கொடுக்கக் கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறினார். நகரத்திலும், கிராமத்திலும் மக்கள் சிறப்பான முறையில் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்கின்றனர்.

புதுச்சேரி மக்கள் முழுமையாக ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு விதிகளை கடைபிடிக்க வேண்டும். தேவையில்லாமல் வெளியே வரக் கூடாது என்றும்  மத தலைவர்கள் மதவிழாக்களை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.

Also see...சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: April 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading