• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • அதிகரித்து வரும் கொரோனா தொற்று எண்ணிக்கை: கடும் கட்டுப்பாட்டுக்குள் வந்தது புதுச்சேரி சட்டமன்றம்..

அதிகரித்து வரும் கொரோனா தொற்று எண்ணிக்கை: கடும் கட்டுப்பாட்டுக்குள் வந்தது புதுச்சேரி சட்டமன்றம்..

கிருமி நாசினி தெளிக்கப்படும் புதுச்சேரி சட்டமன்றம்..

கிருமி நாசினி தெளிக்கப்படும் புதுச்சேரி சட்டமன்றம்..

சட்டமன்றத்துக்கு தொடர்ச்சியாக வரும் பணியாளர் ஒருவருக்கு கொரோனாவால் இறந்துள்ளதால்  நோய்தொற்று ஏற்பட்டிருக்கும் என்ற அச்சத்தில் புதுச்சேரி சட்டமன்ற முழுவதும் மீண்டும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. மேலும்  கடும் பாதுகாப்புக்கு கீழ் சட்டமன்ற வளாகம் கொண்டு வரப்பட்டுள்ளது.

  • Share this:
சட்டமன்றத்துக்கு தொடர்ச்சியாக வரும் பூ விற்கும் தொழிலாளர் ஒருவருக்கு கொரோனாவால் இறந்துள்ளதால்  நோய்தொற்று ஏற்பட்டிருக்கும் என்ற அச்சத்தில் புதுச்சேரி சட்டமன்ற முழுவதும் மீண்டும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. மேலும்  கடும் பாதுகாப்புக்கு கீழ் சட்டமன்ற வளாகம் கொண்டு வரப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கொரோனா நோய் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று வரை 271 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் பலியாகியுள்ளனர். இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை இறந்த  37 வயது மிக்கவர் வைத்திக்குப்பம் பகுதியை சேர்ந்தவர். இவர் பழம் மற்றும்  பூ வியாபாரம் செய்து வந்தவர்.  தினமும் இவர் சட்டமன்றத்திற்கு வந்து முதல்வர் அமைச்சர் மற்றும் சபாநாயகர் அலுவலங்களில் பூ வைப்பது வழக்கம்.

அவர்  கொரோனாவால் இறந்துள்ளதால்  நோய்தொற்று ஏற்பட்டிருக்கும் என்ற அச்சத்தில் புதுச்சேரி சட்டமன்ற முழுவதும் மீண்டும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. மேலும்  கடும் பாதுகாப்புக்கு கீழ் சட்டமன்ற வளாகம் கொண்டு வரப்பட்டுள்ளது. அவசியமின்றி சட்டமன்றத்திற்கு மக்கள் வர வேண்டாம் என சபாநாயகர் சிவகொழுந்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன் அனுமதி பெறாதவர்கள் முதல்வர் மற்றும் அமைச்சர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட மாட்டார்கள் என்றும்  சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதியில் உள்ள அலுவலகத்திலேயே பொதுமக்களை சந்தித்து பணியாற்ற வேண்டும் எனவும்  சபாநாயகர் கேட்டுக் கொண்டுள்ளார்.

சட்டமன்றத்திற்கு வருகையை கட்டுப்படுத்துவது குறித்து முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள்ஆகியோருடன் கலந்தாலோசித்த பின் முடிவு அறிவிக்கப்படும் என்றும் சபாநாயகர் சிவக்கொழுந்து தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

ஊரடங்கில் சைலண்ட்டாக அதிகரித்து வரும் பெட்ரோல் விலை: இன்றைய நிலவரம் என்ன?

சமூக இடைவெளியை பின்பற்றாமல் புதுச்சேரி சட்டமன்றத்திற்கு தினமும் மிக அதிகமான எண்ணிக்கையில் பொதுமக்கள் வருவதால்  இது  நோய் தொற்று வழிவகுக்கும் என்றும் சபாநாயகர் அச்சம் தெரிவித்துள்ளார்.

இதனால் இன்று முதல் 50 மீட்டர் தூரத்திற்கு சட்டமன்றத்தை சுற்றி தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: