ஏழைகளின் வங்கி கணக்கில் ரூ.6 ஆயிரம் செலுத்துங்கள்: பிரதமருக்கு காங்கிரஸ் கடிதம்!

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஏழைகளின் வங்கிக் கணக்கில் மாதம் 6 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு மக்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்திரி கடிதம் எழுதியுள்ளார்

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஏழைகளின் வங்கிக் கணக்கில் மாதம் 6 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு மக்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்திரி கடிதம் எழுதியுள்ளார்

 • Share this:
  இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை தீவிரமாக பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒருசில மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து காணப்படுகின்றது.  வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களும் பகுதிநேர ஊரடங்கு, முழு  ஊரடங்கு என கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. டெல்லி, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

  ஊடங்கு காரணமாக வணிக நிறுவனங்கள், கடைகள், போக்குவரத்து போன்றவை சார்ந்து பணியாற்றுவோர் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஏழைகளுக்கு  ஊரடங்கால் ஏற்பட்டுள்ள இழப்பை ஈடு செய்யும் விதமாக மாதம் 6 ஆயிரம் ரூபாயை அவர்களின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்திரி கடிதம் எழுதியுள்ளார்.

  மேலும் படிக்க... மருத்துவ சேவைக்கு கார்களை இலவசமாக வழங்கிய விஜய் ரசிகர்கள்

  இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்,  நாட்டின் பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கின் காரணமாக, தினக்கூலிகள், விளிம்புநிலை மக்கள், ஏழைகள் ஆகியோர் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். பலர் வேலையை இழந்து தவிக்கின்றனர்.  அத்தகையோர் தங்களை முழுவதும் கைவிடப்பட்டவர்களாகவும் நிர்கதியாக இருப்பதாகவும் எண்ணுகின்றனர்.

  எனவே, அத்தகையோருக்கு உணவு தானியங்களை  விலையின்றி வழங்க வேண்டும் என்றும் வேலையின்றி தவிப்பவர்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தியிருந்தார்.  இந்த ஆலோசனையை ஏற்று ஊரடங்கு அமலில் உள்ள மாநிலங்களில் உள்ள ஏழைகளின் வங்கி கணக்கில்  மாதம் 6 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

  இந்த நடவடிக்கை பொருளாதாரம் பெருக உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Murugesh M
  First published: