Home /News /coronavirus-latest-news /

போலீஸ் கெடுபிடிகளுக்கு எதிர்ப்பு: நெல்லையில் அனைத்து மளிகைக் கடைகளும் மூடல்!

போலீஸ் கெடுபிடிகளுக்கு எதிர்ப்பு: நெல்லையில் அனைத்து மளிகைக் கடைகளும் மூடல்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

நெல்லை நகரில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட மொத்த கடைகளும், நூறுக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.

    போலீஸ் கெடுபிடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில்  இன்று அனைத்து மளிகைக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.

    நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த சில்லறை வியாபாரிகள், நெல்லை நகர் பகுதியில் உள்ள மொத்த விற்பனை கடைகளில், பொருட்கள் வாங்க அதிகாலையிலேயே வாகனங்களுடன் குவிகின்றனர். இதனால் காலை 6 மணி முதல் 12 மணி வரை நகர் பகுதி, கூட்டமாக காணப்படுகிறது. சில்லறை வியாபாரிகளின் வாகனங்கள், கடைகளின் முன்னே நிறுத்தப்படுகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போலீஸ்,வாகனத்திற்கு 500 ரூபாய் அபராதம் விதிப்பதாகவும், அவமரியாதையாக பேசுவதாகவும், சிலரை காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று மணிக்கணக்கில் காக்க வைப்பதகாவும் குற்றம்சாட்டுப்படுகிறது.

    இந்நிலையில் வியாபாரிகள் ஒன்றுகூடி இன்று முதல் கடைகளை திறப்பதில்லை என முடிவு செய்துள்ளனர். அதன்படி நெல்லை நகரில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட மொத்த கடைகளும், நூறுக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.

    Also see...











    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: CoronaVirus, Nellai

    அடுத்த செய்தி