• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • நேபாளத்தில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்கக் கோரி போராட்டம்

நேபாளத்தில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்கக் கோரி போராட்டம்

போராட்டக்காரர்களை தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்.

போராட்டக்காரர்களை தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்.

நேபாளத்தில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்கக் கோரி நடந்த போராட்டத்தை காவல்துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து கலைத்தனர்.

  • Share this:
    நேபாளத் தலைநகர் காத்மாண்டில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தண்ணீரை பீய்ச்சியடித்து காவல்துறை கலைத்தது. கொரோனா சிகிச்சைக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் மோசடி நடந்துள்ளதாகவும் கூறி இந்தப் போராட்டம் நடந்தது.

    ஆயிரக்கணக்கில் ஒன்றுகூடிய போராட்டக்கார்கள் பிரதமர் அலுவலகத்தை நோக்கி முன்னேறிச் சென்றனர். அப்போது, தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்காமல் ஊரடங்கை மீறியதாகக் கூறி தண்ணீரைப் பீய்ச்சியடித்து அவர்களை காவல்துறையினர் விரட்டியடித்தனர்.

    Also see:

    நேபாளத்தில் கொரோனாவால் 4,364 பேர் பாதிக்கப்பட்டு 15 பேர் மரணமடைந்த நிலையில், தொழிற்சாலைகளைத் திறக்கவும், வாகனங்களை இயக்க அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 85 விழுக்காட்டினர் இந்தியாவிலிருந்து நேபாளுக்கு வந்தவர்கள்தான் என அந்நாட்டு பிரதமர் ஷர்மா ஒலி சாடியது குறிப்பிடத்தக்கது.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: