முன்கள பணியாளர்கள் அல்லது முன்கள் போராளிகள் (Frontline Warriors) என்றழைக்கப்படும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் ஆகியோர் இந்த கொடிய தொற்றுநோயான கொரோனாவுக்கு எதிராக தங்கள் முழு பலத்தோடு போராடி வருகிறார்கள். தூக்கமின்மை, மன அழுத்தம் அதிகரிப்பு, குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து விலகியிருத்தல் ஆகிய அனைத்தும் முன்கள பணியாளர்களின் உடலிலும், மனதிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
முதன் முதலில் கொரோனா வைரசுக்கு மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட இத்தாலிய வீதிகளில் இசை கருவிகள் வாசிக்கப்பட்டன. இவை மருத்துவர்கள் மற்றும் மக்களின் மன அழுத்தத்தை குறைத்தது. இப்போது, இந்தியாவில் மருத்துவ மாணவரான அனினா படேல், இசையும் இயக்கமும் நோயாளிகளுக்கு எப்படியான தளர்வு நிலையை அளிக்கும் என்பதைக் கண்டுபிடிக்க விரும்பினார். அதேபோல, முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் போன்றவர்களுக்கு இசை மற்றும் இயக்கம் உதவுமா என்பதையும் கண்டறிய விரும்பினார்.
இது குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகைக்கு பேட்டி அளித்திருக்கும் அனினா, “ஒரு மருத்துவரின் வாழ்க்கை எல்லா விதத்திலும் மன அழுத்தமாக இருக்கிறது. தேர்வுகளுக்குப் படிப்பது போன்ற பிற அழுத்தங்களும் உள்ளன. இந்த சூழ்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு அருகிலேயே இருப்பது மற்றும் செயல்படுவது போன்ற அன்றாட வார்டு வேலைகள் அழுத்தத்தின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளன” என்று கூறினார். தனது சோர்வுற்ற வாழ்க்கையில், கலை முயற்சிகளை கையில் எடுக்க அனினா முடிவெடுத்தார்.
கூடுதலாக, பிஸியான வேலை திட்டத்தை அனினாவால் விட்டுவிட முடியவில்லை. இதனால், அனினா தனது ஷிப்டுகளில் இடைவேளையின்போது ப்ளீ மற்றும் பைரூட் போன்ற சில பாலேட் நடன அசைவுகளை (ballet moves) பயிற்சி செய்ய நினைத்தார். ஆனால் அவருடைய வாழ்க்கை முறைகளுக்கு இந்த முயற்சி சரியாக பொருந்தியதாக தெரியவில்லை. இருப்பினும் அவர் முயற்சியைக் கைவிடவில்லை. அவரின் யோசனைதான் ப்ராஜெக்ட் மூவ் (Project Move) எனப்படும் இசை மற்றும் இயக்கங்களைக் கொண்ட ஒரு ஆன்லைன் நூலகம் திறக்க காரணமாக இருந்தது. இது சுகாதாரத் தொழிலாளர்கள் தங்கள் சுய பாதுகாப்புக்காக சில நிமிடங்கள் மட்டுமே செலவிட உதவுகிறது. Projectmove.in என்ற வலைதள பக்கம் "சோர்வுற்ற சுகாதார நிபுணர்களின்" தேவைகளைப் பூர்த்தி செய்வதை இலக்காகக் கொண்ட முற்றிலும் இலவச ஆன்லைன் தளமாகும்.
இந்த வலைதள பக்கத்தின் நிறுவனர் வைதேஹி படேல் (Vaidehi Patel) ஒரு மூவ்மெண்ட் பயிற்றுவிப்பாளர் மற்றும் பாலேட் நடனக் கலைஞர் ஆவார். தொடக்கத்தில், வைதேஹியை அனைனா அணுகினார். தனது வகுப்புகளில் கலந்து கொள்வதற்கான ஷெட்யூலில் இலவச இடம் இல்லாததால் அனினா பின்வாங்கிய போது, வைதேஹிக்கு இந்த திட்டத்தைத் தொடங்கும் யோசனை வந்ததாக தெரிவித்தார்.
இது குறித்து வைதேஹி கூறியதாவது, "நான் மருத்துவமனைகளில் பணிபுரிந்தேன். தொற்றுநோயால், மருத்துவர்களின் மன அழுத்தம் உயர்ந்ததை உணர்ந்தேன். இது நன்றியுணர்வை வெளிப்படுத்தும் ஒரு வழியாக, அவர்களுக்கான ஒரு தளத்தை உருவாக்குவதற்கு என்னை மேலும் தூண்டியது, "என்று கூறினார். ஒரு மூவ்மெண்ட் நிபுணராக, சில நிதானமான இசை மற்றும் இயக்கத்துக்கு இந்த ஆன்லைன் தளத்தை உருவாக்குவதென முடிவு எடுத்தேன்” எனக் கூறினார்
வைதேஹி படேல்
இந்த இயக்கம், அனைத்தும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற கடின உழைப்பாளிகளான சுகாதார ஊழியர்களின் மனநிலை மற்றும் பொது நல்வாழ்வை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டுள்ளன. இந்த இயக்கம், நடனம் மற்றும் பாலேட்ஸ் மூலம் மேற்கொள்ளப்படும் தியானத்தின் வடிவங்களாகும். அவர்களின் மன அழுத்தத்தை அமைதிப்படுத்த சில இனிமையான சுவாச பயிற்சிகளையும் அவர் இந்த பயிற்சியில் இணைத்துள்ளார். மேலும் வைதேஹி கூறியபோது, ‘பல இசைக்கலைஞர்கள் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக சேர முன்வந்தனர்’ என கூறியுள்ளார்.
ப்ராஜெக்ட் மூவ் பணியாளர்கள் பலவிதமான பிளேலிஸ்ட்களை உருவாக்கியுள்ளனர். அவற்றில் கிட்டார், திபெத்திய பவுல், ஹேண்ட்பான் மற்றும் பிற இனிமையான கருவிகளுடன் சில உன்னதமான இசையும் அடங்கியுள்ளன. இசையை பொறுத்தவரை பாப்-சவுண்டிங் நம்பர்ஸ், மிட்நைட் ராகாஸ், ஸ்லீப்பி மெலோடிஸ் என பலவகை இந்த பயிற்சியில் இடம் பெற்றிருப்பதாக தெரிவித்துள்ளார். அனைத்தும் நிதானமாகவும் கேட்பவரை மகிழ்ச்சியடையச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன என வைதேஹி கூறியுள்ளார்.
Published by:Gunavathy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.