ஏனாம் பகுதியில் மீன்-இறைச்சி விற்பனைக்கு இன்று முதல் தடை

ஏனம் மார்கெட் பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் அமைச்சர்

பொதுமக்கள் கைகளை அடிக்கடி கழுவவேண்டும்; முக கவசம் அணியாமல் வெளியே வரவேண்டாம் என்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கேட்டுக்கொண்டார்.

  • Share this:
கொரோனா அச்சம் காரணமாக ஏனாம் பிராந்தியத்தில் இன்று முதல் மீன்-இறைச்சி விற்பனைக்கு  தடை என்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உத்தரவிட்டுள்ளார். 

புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட ஏனாம் பிராந்தியம் ஆந்திர மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ளது. ஆந்திராவில் பலருக்கு கொரோனா  ஏற்பட்டுள்ளது. ஏனாமில் ஒருவர் கூட பாதிக்கப்படாத சூழ்நிலையில் ஏனாம்-ஆந்திர   எல்லைகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டுள்ளன.

இதனை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் சுகாதாரத் துறை அமைச்சருமான மல்லாடி கிருஷ்ணாராவ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.  இங்கு  மீன்பிடித்தொழில் முக்கியத்தொழிலாக இருக்கிறது. இதனால் மீன்களை வாங்க ஆந்திரப் பகுதியில் இருந்து ஏராளமானோர் ஏனாம்  பகுதிக்கு வருகின்றனர்.

இதனால்  நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக நேரில் ஆய்வு செய்த அமைச்சருக்கு அதிகாரிகள்  தெரிவித்தனர். அதன் காரணமாக நோய்த் தொற்றைத் தடுக்கும் விதமாக ஏனாமில் இன்று முதல்  மீன் மற்றும் இறைச்சி விற்பனைக்கு தடை விதித்து கடைகளை இன்று முதல் மூடியிருக்க அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உத்தரவிட்டார்.

மேலும் வழி முழுதும் பொதுமக்களை சந்தித்து கைகளை அடிக்கடி கழுவவேண்டும். முக கவசம் அணியாமல் வெளியே வரவேண்டாம். தேவையற்ற காரணங்களுக்காக வெளியே சுற்ற வேண்டாம் என அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

Also see...சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Published by:Vaijayanthi S
First published: