• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை: கட்டணம் எவ்வளவு?

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை: கட்டணம் எவ்வளவு?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை இந்திய மருத்துவக் கவுன்சில் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

  • Share this:
    தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் நிர்ணயம் ஐ.எம்.ஏ தமிழகப் பிரிவால் செய்யப்பட்டுள்ளது.

    சாதாரண வார்டுகளில் சிகிச்சை பெறும் கொரோனா பாதிப்புடைய ஒருவரிடம் மருத்துவர் ஆலோசனை கட்டணத்தை தவிர்த்து நாள் ஒன்றுக்கு 23,182 ரூபாய் கட்டணம் வசூல் செய்யலாம் எனவும் மருந்து, படுக்கை கட்டணம், அறை வாடகை என அனைத்தும் சேர்த்து 10 நாட்களுக்கு 2, 31,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுபவர்களிடம் நாள் ஒன்றுக்கு 43, 141 ரூபாயும், 17 நாட்களுக்கு 4,31,000 ரூபாயும் வசூல் செய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

    மருத்துவர்கள், தனிமைப்படுத்தப்படும் பணியாளர்களுக்கான கட்டணமாக நாள் ஒன்றுக்கு 9,600 ரூபாய் வரை நிர்ணயிக்கலாம் எனவும் இந்திய மருத்துவக் கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது.

    மேலும் படிக்க...

    கொரோனா பரவலால் நிறுத்தப்பட்ட சிகிச்சைகள்: தமிழகத்தில் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி..






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: