• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு உதவி - 7 பஸ்களை இலவசமாக இயக்கும் தனியார் பஸ் நிறுவனம்

வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு உதவி - 7 பஸ்களை இலவசமாக இயக்கும் தனியார் பஸ் நிறுவனம்

வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு உதவும் வகையில் 7 பஸ்களை இலவசமாக இயக்கும் தனியார் பஸ் நிறுவனம்

வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு உதவும் வகையில் 7 பஸ்களை இலவசமாக இயக்கும் தனியார் பஸ் நிறுவனம்

ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு உதவும் வகையில் கோவில்பட்டியில் 7 பஸ்களை, தனியார் பஸ் நிறுவனம் இலவசமாக இயக்குகிறது.

  • Share this:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் ஒரு தனியார் பஸ் நிறுவனம் 10 தினங்களுக்கு எவ்விதக் கட்டணமுமின்றி பயணிகள் பயணிக்கலாம் என்று அறிவித்துள்ளது.

கழுகுமலை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் எஸ்.எஸ்.ஆர்.பி.எஸ் என்ற தனியார் பஸ் நிறுவனம் கோவில்பட்டியிலிருந்து சங்கரன்கோவில், புளியங்குடி, தென்காசி வரையிலும் மற்றும் ராஜபாளையம் வரையிலும் வழித்தடத்தில் 7 பஸ்களை இயக்கி வருகிறது.

இந்த பஸ்களில் பயணம் செய்பவர்கள் பெரும்பாலும் கிராமப்புறங்களை சேர்ந்த தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கொரனோ ஊரடங்கில் தமிழக அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளதால் தொழிலாளர்கள் இரண்டு மாதத்திற்கு பின்னர் வேலைக்கு செல்கின்றனர்.

ஊரடங்கு காரணமாக தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் அவர்களுக்கு உதவும் வகையில் இந்த இலவச பயணம் என்ற முடிவினை எடுத்து உள்ளதாகவும், அரசு விதித்துள்ள விதிமுறைகளின்படி ஒவ்வொரு முறையும்  35 பயணிகள் மட்டுமே ஏற்றிக் கொள்ளப் படுவார்கள் என்றும், பத்து தினங்கள் மக்கள் அனைவரும் இலவசமாக பயணிக்கலாம் என்றும் தனியார் பஸ் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்‌.

தனியார் பஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு அந்த நிறுவன பஸ்களில் பயணிக்கும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அந்த தனியார் பஸ் நிறுவனத்தைச் சேர்ந்த நிர்வாகி ஸ்ரீதர் கூறுகையில், ஊரடங்கு நாளில் மக்களின் வாழ்வாதாரம் எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பது நம் கண்முன்னே தெரிகிறது, எங்களுடைய பஸ்களில் தினமும் ஏராளமான தொழிலாளர்கள் பயணிப்பது வழக்கம், மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருக்கும் அவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவ வேண்டும் என்பதற்காக இந்த இலவச பயண திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், 10 தினங்கள் பொதுமக்கள் தங்கள் நிறுவனத்தின் 7 பஸ்களிலும் இலவசமாக பயணிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

டிக்டாக் செயலிக்கு போட்டியாக வந்துள்ள சிங்காரி - பணம் கிடைக்கும் அம்சம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: