தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் கடன் வசூலை நிறுத்துக - தமிழக அரசு எச்சரிக்கை

தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் கடன் வசூலை நிறுத்துக - தமிழக அரசு எச்சரிக்கை
  • Share this:
தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவை மாத வட்டி, அசல் உள்ளிட்ட பண வசூலை நிறுத்த வேண்டுமென்று தமிழ அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளதால் தினக்கூலி தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் தங்களது வாழ்வதாரத்தை இழந்து சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு அரசு சார்பில் உதவித்தொகை, நிவாரணம் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் தமிழக அரசு விடுத்துள்ள அறிக்கையில், “பல கிராமங்களிலும், நகரங்களிலும் தனியார் வங்கிகள், சிறிய நிதிநிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள் ஆகியவை தினசரி, வாரந்திர, மாத கடன் வட்டி மற்றும் அசலை வசூல் செய்கின்றன. தற்போது ஊரடங்கு உத்தரவினால் யாரும் வேலைக்கு செல்ல இயலாத நிலையில், இதுப்போன்ற பண வசூலை உடனடியாக மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க வேண்டும்.

இந்த உத்தரவினை மீறுபவர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை தொடரும்“ என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
 
First published: March 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்