Home /News /coronavirus-latest-news /

சிறைகளில் கொரோனா பரவல்... மகாராஷ்டிராவில் 50% கைதிகளை தற்காலிகமாக விடுவிக்க முடிவு...!

சிறைகளில் கொரோனா பரவல்... மகாராஷ்டிராவில் 50% கைதிகளை தற்காலிகமாக விடுவிக்க முடிவு...!

கோப்புப்படம்

கோப்புப்படம்

ஊபா உள்ளிட்ட கடுமையான சட்டங்களில் சிறையில் உள்ளவர்களுக்கு இந்த விதி பொருந்தாது.

    மகாராஷ்டிராவில் கொரோனா வேகமாகப் பரவிவரும் நிலையில் சிறைச்சாலைகளில் உள்ள 50 சதவிகித கைதிகளை தற்காலிகமாக விடுவிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

    இதற்காக இடைக்கால ஜாமின் மற்றும் பரோல் வழங்கப்பட உள்ள நிலையில், எத்தனை நாட்களுக்கு அவை செல்லுபடியாகும் என்ற விவரம் ஏதும் அறிவிக்கப்படவில்லை. விசாரணைக் கைதிகளும், 7 ஆண்டுகள் வரை தண்டனை பெற்றவர்கள் மட்டுமே தற்காலிகமாக விடுதலை செய்யப்பட உள்ளனர்.

    ஊபா உள்ளிட்ட கடுமையான சட்டங்களில் சிறையில் உள்ளவர்களுக்கு இந்த விதி பொருந்தாது. மும்பை ஆர்தர் சாலை சிறையில் கைதிகள், ஊழியர்கள் உள்பட 100 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see:
    Published by:Rizwan
    First published:

    Tags: CoronaVirus, Maharashtra, Prison

    அடுத்த செய்தி