முகப்பு /செய்தி /கொரோனா / அனைத்து தடுப்பூசி மையங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை: தமிழக அரசு அறிவிப்பு

அனைத்து தடுப்பூசி மையங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை: தமிழக அரசு அறிவிப்பு

அறிவியல் பூர்வமாக நன்கு ஆய்வுகள் செய்த பின்னரும் மக்களுக்கு அதன் பயன்பாடு மற்றும் பலன் குறித்த சந்தேகங்கள் இருக்கின்றன. தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று சொல்வதற்கான முதல் காரணம் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்து இறப்புகளை தவிர்க்க வேண்டும் என்பதுதான். இது நீண்ட காலத்திற்கு உங்களை தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. எனவே தயக்கமின்றி தடுப்பூசி செலுத்துக்கொள்ள மருந்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

அனைத்து தடுப்பூசி மையங்களிலும் பொது வரிசை அல்லது மாற்றுத் திறனாளிகளுக்கான தனி வரிசை ஏற்படுத்தப்பட வேண்டும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மாற்றுத் திறனாளிகள் எந்தவித சிரமுமில்லாமல் தடுப்பூசி பெறுவதற்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தினசரி தொற்று பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது உயிரிழப்புகளும் அதிகரித்து காணப்படுகிறது. நோய்தொற்று பரவலை தடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், மாற்றுத் திறனாளிகள் சிரமமில்லாமல் தடுப்பூசி பெற சிறப்பு ஏற்பாடு மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்து தடுப்பூசி மையங்களிலும் மாற்றுத்திறனாளிகள் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி பெறுவதற்கு தனியாக ஒரு பிரிவு தோற்றுவிக்கப்பட வேண்டும்.

அனைத்து தடுப்பூசி மையங்களிலும் பொது வரிசை அல்லது மாற்றுத் திறனாளிகளுக்கான தனி வரிசை ஏற்படுத்தப்பட வேண்டும்.

அனைத்து தடுப்பூசி மையங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வுத் தளம் அமைக்கப்பட வேண்டும்.

தேவைக்கேற்ப மாற்றுத்திறனாளிகள் நலத்துறையுடன் இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கென சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைத்து செயல்படுத்தப்பட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Corona Vaccine, Covid-19 vaccine