கொரோனா வைரஸ் பாதிப்பால் ஸ்பெயின் இளவரசி உயிரிழப்பு...!

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஸ்பெயின் இளவரசி உயிரிழப்பு...!
  • News18
  • Last Updated: March 29, 2020, 12:04 PM IST
  • Share this:
கொரோனா வைரசால் முதல் அரச குடும்ப உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டு இளவரசி மரியா தெரசா கொரோனா வைரஸ் பாதிப்பால் நேற்றிரவு உயிரிழந்தார்.

இனம், மொழி, தேசம் என எந்த வித பேதமுமின்றி உலகை சூறையாடி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் அரச குடும்பங்களையும் விட்டு வைக்கவில்லை. ஸ்பெயினின் இளவரசியான மரியா தெரசாவை அண்மையில் கொரோனா கிருமி தாக்கியது.

இதற்காக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்றிரவு மரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்த மரியா தெரசாவுக்கு வயது 86.


உலகளவில் அரச குடும்பங்களில் நேரிட்ட முதல் கொரோனா உயிரிழப்பு இதுவாகும். ஏற்கனவே இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்பெயின் நாட்டில் சுமார் 73 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. சுமார் 7 ஆயிரம் பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTubeFirst published: March 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading