ஆயுர்வேத மருந்தால் குணமடைந்தாரா இளவரசர் சார்லஸ்? அரண்மனை தரப்பில் விளக்கம்

ஆயுர்வேத மருந்தால் குணமடைந்தாரா இளவரசர் சார்லஸ்? அரண்மனை தரப்பில் விளக்கம்
  • Share this:
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இந்திய ஆயுர்வேத மருந்தால் குணமடையவில்லை என்று அரண்மனை சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் குணமடைந்தார். பெங்களூருவில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனை வழங்கிய சிகிச்சையின் மூலம் அவர் கொரோனாவின் பிடியிலிருந்து மீண்டதாக மத்திய ஆயுஷ் துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் தெரிவித்திருந்தார்.

ஆனால் இந்த தகவலை அரண்மனை செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார். இளவரசர் சார்லஸ் இங்கிலாந்தில் உளள் என்.எச்.எஸ் (தேசிய சுகாதார சேவை) மருத்துவ ஆலோசனையை தான் பின்பற்றினார். அதற்கு மேல் எதுவும் இல்லை என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இது தொடர்பாக அமைச்சர் ஸ்ரீபத் நாயக் கூறுகையில், “இந்திய ஆயுர்வேத மருந்தால் இளவரசர் சார்லஸ் குணமடைந்தார் என்று கூறியது நான் சொன்ன தகவல் இல்லை. பெங்களூரு ஆயுர்வேத மையம் நடத்தி வரும் ஐசக் மத்தாயிடம் வந்த அழைப்பில் அவர் எனக்கு கூறியது“ என்றார்.

சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: April 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading