கொரோனா தொற்று தொடர்பாக விளையாட்டு வீரர்களுடன் இன்று வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் உரையாடினார் பிரதமர் மோடி.
கொரோனா தொற்று நடவடிக்கை தொடர்பாக தொடர்ந்து மாநில முதல்வர்கள், மருத்துவர்கள் என முக்கிய நபர்களுடன் ஆலோசித்து வரும் மோடி இன்று 40 விளையாட்டு வீரர்களுடன் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் உரையாற்றினார்.
இந்த ஆலோசனையில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, சச்சின், தோனி, ரோஹித், கங்குலி, மேரி கோம், ஹிமா தாஸ், பி.டி.உஷா, பி.வி.சிந்து உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர வீரர்கள் என 40 வீரர்களுடன் மோடி ஆலோசனையில் ஈடுபட்டார்.
40 வீரர்கள் அடங்கிய இந்த வீடியோவழி ஆலோசனையில் தமிழகத்தை சேர்ந்த செஸ் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி, டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் ஆகியோரும் இருந்தனர்.
இதுகுறித்து நமக்கு பிரத்யேக பேட்டியளித்த பவானி தேவி, கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளிலும், இந்த பெருந்தொற்றிலிருந்தும் நாம் வெற்றியடைந்துவிட்டோம். விளையாட்டு வீரர்கள் முறையாக தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும். அனைவரும் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும் என நம்பிக்கை அளித்தார்.
அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் முடங்கி கிடக்கும் இந்த கொரோனோ காலத்தில் வீரர்களுடன் மோடி கலந்துரையாடி அனைவருக்கும் நம்பிக்கையளித்துள்ளார்.
Also see...
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.