• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • தடுப்பூசி திருவிழா... : மாநில முதலமைச்சர்களிடம் பிரதமர் மோடி அறிவுறுத்தல்

தடுப்பூசி திருவிழா... : மாநில முதலமைச்சர்களிடம் பிரதமர் மோடி அறிவுறுத்தல்

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

அதிகபட்ச பயனாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி சென்றடையும் வகையில் தடுப்பூசி திருவிழாவை கடைப்பிடிக்குமாறும், கொரோனா பரவலை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை என்றும் மாநில முதலமைச்சர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார்.

  • Share this:
    அதிகபட்ச பயனாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி சென்றடையும் வகையில் தடுப்பூசி திருவிழாவை கடைப்பிடிக்குமாறும், கொரோனா பரவலை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை என்றும் மாநில முதலமைச்சர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார்.

    கொரோனாவின் முதல் அலையைவிட 2 ஆவது அலை வீரியமாக தாக்கி வருகின்றது. அதிகரித்து வரும் கொரோனா தொற்றை தடுப்பதற்கு மத்திய அரசும், பிரதமர் நரேந்திர மோடியும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து உயர்மட்ட அதிகாரிகளுடன் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.

    இந்நிலையில், நேற்று மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். காணொலி காட்சி மூலம் நடந்த இந்த கூட்டத்தில், மாநிலங்களின் தொற்று நிலவரம், தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி பணிகள் போன்றவை குறித்து கேட்டறிந்த பிரதமர் மோடி, கொரோனா தொற்றுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர்களிடம் எடுத்துரைத்தார்.

    கூட்டத்தில் பிரதமர் பேசுகையில், கொரோனாவுக்கு எதிரான செயல்பாடுகளை மேலும் மேம்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது. ஆனால், கடந்த ஓராண்டு போராட்டத்தால் இந்த அமைப்பில் ஒருவித சோர்வும், கவனக்குறைவும் ஏற்பட்டிருப்பது என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

    எனினும் கொரோனாவுக்கு எதிரான பிடியை நாம் அடுத்த 2-3 வாரங்களுக்கு மேலும் இறுக்க வேண்டும். அத்துடன் நிர்வாகத்தையும் வலுப்படுத்த வேண்டும். இந்த வைரசை கையாளுவதற்கு நாடு ஏற்கனவே வைத்திருந்ததை விட தற்போது இன்னும் கூடுதலான வளங்கள் உள்ளன. எனவே மிகச்சிறிய கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்கள் மீது நமது கவனத்தை செலுத்த வேண்டும்.

    கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு, ‘பரிசோதனை, கண்டறிதல், சிகிச்சை செய்தல்’, கொரோனாவுக்கான பொருத்தமான நடத்தை மற்றும் கொரோனா மேலாண்மை ஆகியவை அவசியம். இந்த சூழலை கையாளுவதற்கு பொதுமக்களின் பங்களிப்புடன், நமது தலைசிறந்த மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் மிகப்பெரும் உதவியை செய்துள்ளனர், தற்போதும் செய்து வருகின்றனர்.

    கொரோனாவுக்கு எதிரான ஆளுகை பல மாநிலங்களில் குறைந்துள்ளதால் தொற்று அதிகரித்து பிரச்சினைகள் பெருகியுள்ளன. எனவே வைரஸ் பரவலை தடுக்க போர்க்கால அடிப்படையிலான நடவடிக்கைகள் அவசியம்.

    பரிசோதனை, கண்டறிதல் மற்றும் சிகிச்சையில் 5 மடங்கு மூலோபாயங்கள், கொரோனா-பொருத்தமான நடவடிக்கை மற்றும் தடுப்பூசி, அதிகபட்ச தீவிரம் மற்றும் உறுதிப்பாட்டுடன் கூடிய அமலாக்கம் போன்றவற்றால் தொற்று பரவலை திறம்பட கட்டுப்படுத்த முடியும் என்றார்.

    மேலும், அதிகபட்ச பயனாளர்களுக்கு தடுப்பூசி சென்றடையும் வகையில் வருகிற 11 ஆம் தேதி முதல் 14ஆம் தேதிக்கு இடையில் ஒரு தடுப்பூசி திருவிழாவை கடைப்பிடிக்குமாறும் முதலமைச்சர்களுக்கு பிரதமர் அறிவுறுத்தினார்.

    தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், தமிழக முதலமைச்சருக்கு பதிலாக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி இந்த கூட்டத்தில் பங்கேற்றார். கொரோனா தடுப்பிற்காக தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை பிரதமரிடம் ராஜீவ் ரஞ்சன் எடுத்துரைத்தார்.

    Must Read :  கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா பாதிப்பு

     

    நிகழ்ச்சியில் காவல்துறை டிஜிபி ஜே.கே.திரிபாதி, வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, சுகாதாரத்துறை முதன்மைச்செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழக மேலாண்மை இயக்குனர் டாக்டர் பி.உமாநாத், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம், இணை இயக்குனர் டாக்டர் வினய் ஆகியோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: