2020-க்குள் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் - அதிபர் டிரம்ப்

செப்டம்பர் முதல் பள்ளிகள், கல்லூரிகளை திறக்க அறிவுறுத்திய அதிபர் டிரம்ப், மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப விரும்புவதாகவும் தெரிவித்தார்.

2020-க்குள் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் - அதிபர் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டிரம்ப்
  • Share this:
நடப்பாண்டு இறுதிக்குள் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை அமெரிக்கா கண்டறியும் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வாஷிடங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டறிவதில் அமெரிக்கா முனைப்புடன் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் அமெரிக்காவில் விஞ்ஞானிகள் மருந்தை கண்டுபிடிப்பில் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும், தற்போதைக்கு அது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்றும் அதிபர் டிரம்ப் கூறினார்.


மேலும், வருகிற செப்டம்பர் முதல் பள்ளிகள், கல்லூரிகளை திறக்க அறிவுறுத்திய அதிபர் டிரம்ப், மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப விரும்புவதாகவும் தெரிவித்தார்.


Also see...
First published: May 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading