• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கொரோனா காலத்தில் கருவுற்ற தாய்மார்களுக்கு தனிக்கவனம் செலுத்தும் புதுச்சேரி அரசு மருத்துவமனை.. மருத்துவர்களின் அறிவுறுத்தல் என்ன?

கொரோனா காலத்தில் கருவுற்ற தாய்மார்களுக்கு தனிக்கவனம் செலுத்தும் புதுச்சேரி அரசு மருத்துவமனை.. மருத்துவர்களின் அறிவுறுத்தல் என்ன?

கோப்புப் பாடம்

கோப்புப் பாடம்

கொரோனா காலத்தில் கர்ப்பமுற்ற பெண்கள் பயப்பட வேண்டாம் என்று புதுச்சேரி ராஜீவ் காந்தி மருத்துவமனை மருத்துவர்களின் கூறும் அறிவுரைகள் என்னென்ன?

  • Share this:
கொரோனா காலத்தில் கர்ப்பமுற்ற பெண்கள் தங்களுக்கு கொரோனா வந்து விடுமோ? அது வயிற்றில் இருக்கும் குழந்தையை பாதிக்குமோ? பரிசோதனைக்கு மகப்பேறு மருத்துவமனைக்கு சென்றால் கொரோனா தொற்றி கொள்ளுமோ? என பல மனக் குழப்பத்தில் இருக்கிறனர். இவர்களுக்கு புதுச்சேரி அரசின் ராஜீவ் காந்தி மகப்பேறு மருத்துவமனை பரிசோதனை மற்றும் பிரசவத்திற்கு வரும் மகளிருக்குரிய பரிசோதனை செய்து மன தைரியம் அளிக்கிறது.

ராபீட் அன்ட்டிஜெண்ட் பரிசோதனையால் 20 நிமிடத்தில் கொரோனா இருக்கா.. இல்லையா என கண்டுபிடிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. புதிதாக பிறந்த குழந்தைகள் பாதுகாக்கப்படும் பிரிவில் கிருமிநாசினி எல்லா இடத்திலும் வைக்கப்பட்டு பாதுகாப்பாக பராமரிக்கப்படுகிறது.

மேலும் படிக்க...தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா தொற்று... இன்றைய பாதிப்பு நிலவரம்

ஒவ்வொரு முறையும் குழந்தையை தொடும் போதும் மருத்துவர்கள்,செவிலியர்கள் கிருமிநாசினியை கையில் போடுகிறார்கள். நூறு முறை கூட கிருமிநாசினி  போடுகிறார்கள்.இதனால் புதுச்சேரியில் புதிதாக  பிறந்த  ஒரு குழந்தைக்கு கூட கொரோனா நோய் ஏற்படவில்லை என ராஜிவ்காந்தி மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் குழந்தை பெற்று வீடு திரும்பும் பெண்கள் நிறைய உறவினர்களை பார்க்க அனுமதிக்க கூடாது. குழந்தை பெற்றவர்கள் குறைந்த பட்சம் 3 மாதங்களுக்கு வெளிநபரை அனுமதிக்க கூடாது என கண்டிப்புடன் கூறுகிறார் சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார்.

தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனா நோயாளிகள்... ஆய்வில் தகவல்!

கொரோனா பாதித்த கர்ப்பிணி பெண்களுக்கு புதுச்சேரி அரசு மகப்பேறு மருத்துவமனையில் தனி கவனம் செலுத்தி மருத்துவம் பார்க்கப்படுகிறது. கர்ப்ப காலத்தில்
சத்தான உணவுகளை சாப்பிட்டு தண்ணீர் நன்றாக குடித்து பாதுகாபாக குறைந்தபட்ச சமூக இடைவெளியுடன்  இருக்க வேண்டும்.

கொரோனாவை பெரிய வியாதியாக கருதி மனதை குழப்பிக்கொள்ள வேண்டாம் என்று புதுச்சேரி ராஜிவ் காந்தி மருத்துவமனை மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: