தனக்கு குழந்தை பிறந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்த செவிலியர்!

மேரியின் குழந்தைக்கு கொரோனா தொற்று உள்ளதா என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.

தனக்கு குழந்தை பிறந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்த செவிலியர்!
கொரோனாவால் உயிரிழந்த செவிலியர்.
  • Share this:
இங்கிலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட செவிலியருக்கு அறுவைச் சிகிச்சையின் மூலம் குழந்தை பிறந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.

மேரி அகியேவா அகியாபோங் என்பவர் லூட்டனில் உள்ள லூட்டன் & டன்ஸ்டபிள் பல்கலைக்கழக மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்தார். அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் ஏப்ரல் 5ம் தேதி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது கொரோனா உறுதியான நிலையில் ஏப்ரல் 7 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கர்ப்பிணியாக இருந்த அவரது உடல்நிலை மோசமானதை அடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தையைக் காப்பாற்ற மருத்துவர்கள் முடிவெடுத்தனர். ஈஸ்டர் தினத்தன்று மேரிக்கு அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை பிறந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேரியின் குழந்தைக்கு கொரோனா தொற்று உள்ளதா என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.


Also see:

First published: April 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading