ஹோம் /நியூஸ் /கொரோனா /

5 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்களை மகாராஷ்டிரா அரசு வீணடித்துள்ளது : பிரகாஷ் ஜவடேகர் குற்றச்சாட்டு

5 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்களை மகாராஷ்டிரா அரசு வீணடித்துள்ளது : பிரகாஷ் ஜவடேகர் குற்றச்சாட்டு

பிரகாஷ் ஜவடேகர்

பிரகாஷ் ஜவடேகர்

சரியான திட்டமிடுதல் இல்லாததால் 5 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்களை மகாராஷ்டிரா அரசு வீணடித்ததாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றச்சாட்டியுள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  சரியான திட்டமிடுதல் இல்லாததால் 5 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்களை மகாராஷ்டிரா அரசு வீணடித்ததாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றச்சாட்டியுள்ளார்.

  மகாராஷ்டிரா நாட்டிலேயே கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக அறியப்படுகின்றது. எனவே அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன. மேலும், அங்கு தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

  இந்நிலையில், தங்கள் மாநிலத்தில் தடுப்பூசி டோஸ்கள் பற்றாக்குறை இருப்பதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோப் குற்றம் சாட்னார். தங்களிடம் வெறும் 14 லட்சம் டோஸ்கள் மட்டுமே இருப்பதாகவும், இது 3 நாட்களுக்கு மட்டுமே போதுமானது எனவும் சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்தார். மேலும், போதிய தடுப்பூசி டோஸ்கள் இல்லாததால் பல கொரோனா தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டு இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

  மகாராஷ்டிரா அமைச்சரின் இந்த குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதிலளித்துப் பேசினார். இது குறித்து அவர் கூறுகையில், “மத்திய அரசின் முந்தைய ஒதுக்கீட்டை ஒப்பிடுகையில் மகாராஷ்டிராவுக்கு அதிகமான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. அங்கு தற்போது 23 லட்சம் டோஸ்கள் கையிருப்பு உள்ளன. இது 5 முதல் 6 நாட்களுக்கு போதுமானதாக இருக்கும். மாவட்டங்களுக்கும், கிராமங்களுக்கும் அந்த மருந்தை விநியோகிக்க வேண்டியது மாநில அரசின் கடமை” என்றார்.

  மேலும், முறையான திட்டமிடுதல் இல்லாததால் மகாராஷ்டிரா அரசு 5 லட்சம் தடுப்பூசிகளை வீணடித்ததாகவும், இது சிறு தொகை அல்ல என்றும் குற்றம் சாட்டினார். தடுப்பூசி திட்டத்தை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டியது மாநில அரசின் கடமை என்றும் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

  Must Read : அரசு எடுத்துள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்!

  இந்நிலையில், நேற்று மாநில முதலமைச்சர்களுடன் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா தடுப்பூசிகளை அனைத்து தரப்பினருக்கும் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என்றும் கேட்டுக் கொண்டார்.

  மேலும்,  அதிகபட்ச பயனாளர்களுக்கு தடுப்பூசி சென்றடையும் வகையில் வருகிற 11 ஆம் தேதி முதல் 14ஆம் தேதிக்கு இடையில் ஒரு தடுப்பூசி திருவிழாவை கடைப்பிடிக்குமாறும் முதலமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Suresh V
  First published:

  Tags: Corona Vaccine, CoronaVirus, Maharashtra, Prakash Javadekar