தபால் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி - கடலூர் தலைமை தபால் நிலைய அலுவலகம் மூடல் 

தபால் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி - கடலூர் தலைமை தபால் நிலைய அலுவலகம் மூடல் 

கடலூர் தபால் அலுவலகம்

பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு தலைமை தபால் நிலையம் மூடப்படும் காரணத்தினால் யாருக்கும் அனுமதி கிடையாது என அறிவுறுத்தப்பட்டது

  • Share this:
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனோ தொற்றுநோய் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கடலூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூர் மஞ்சக்குப்பத்தில் தலைமை தபால் நிலையம் இயங்கி வருகிறது. இதில் பணிபுரிந்த தபால்காரர் ஒருவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் அவர் சோதனை செய்தபோது கொரோனா நோய்த்தொற்று உறுதியானது. இதனைத்தொடர்ந்து இத்தகவல் கடலூர் தலைமை தபால் நிலையம் அலுவலக அதிகாரிகளுக்கு தெரிவிக்கபட்டது. அதன்படி இன்று 12-ம் தேதி தலைமை தபால் நிலையம் ஒரு நாள் மட்டும் மூடப்படுகிறது. மேலும் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு தலைமை தபால் நிலையம் மூடப்படும் காரணத்தினால் யாருக்கும் அனுமதி கிடையாது என அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை முதல் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தலைமை தபால் நிலையத்திற்கு வந்து பார்த்து ஏமாந்தபடி மீண்டும் சென்றதை காண முடிந்தது.

https://tamil.news18.com/news/national/covid-19-patient-dies-after-struggling-to-find-icu-bed-hrp-446011.html

இது குறித்து அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ”கடலூர் தலைமை தபால் நிலையத்தில் தபால்காரர் ஒருவருக்கு கொரோனோ தொற்று உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இன்று ஒரு நாள் முழுவதும் எடுக்கப்பட உள்ளது. இதன் காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் தலைமை தபால் நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
Published by:Ramprasath H
First published: