’எல்லோருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்க’ - போப் வேண்டுகோள்

’எல்லோருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்க’ - போப் வேண்டுகோள்

போப் ஃபிரான்சிஸ்

எல்லோருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் என்று போப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  • Share this:
    உலக மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று போப் ஃபிரான்சிஸ் தனது கிறிஸ்துமஸ் தின உரையில் கேட்டுக் கொண்டுள்ளார். இத்தாலியில் கொரோனா பரவலால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் பங்கேற்பின்றி கிறிஸ்துமஸ் தின உரையை நிகழ்த்தினார் போப்.

    அந்த உரையில் உலக நாடுகள், நிறுவனங்கள் தங்களுக்கு இடையிலான போட்டியைத் தவிர்த்து, ஒத்துழைப்பை வழங்கி எல்லோருக்குமான தீர்வை கண்டறிய வேண்டும் என்றார். அபாயம் அதிகம் உள்ளோருக்கும், தேவைப்படுவோருக்கும் தடுப்பூசி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போப் வேண்டுகோள் விடுத்தார்.

    Also read: திமுகவை விரட்டியடிப்போம் என்று தீர்மானம் போட எங்களுக்கு வெகு நேரம் ஆகாது - அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை

    மேலும், போப் தனது உரையில் லிப்யாவிலும் ஈராக்கிலும் அமைதியும் நல்லிணக்கமும் திரும்பவேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். எதிர்வரும் மார்ச் மாதம் போப் ஈராக் செல்லவுள்ளதாக வாடிகன் தகவல் அளித்துள்ளது. அந்தப் பயணத்தின்போது அந்நாட்டின் தலைநகர் மொசுலுக்கும் போப் செல்லவுள்ளார். இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Rizwan
    First published: