புதுச்சேரியில் அதிகபட்சமாக ஒரே நாளில் 174 பேருக்கு கொரோனா உறுதி

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 174 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் அதிகபட்சமாக ஒரே நாளில் 174 பேருக்கு கொரோனா உறுதி
கோப்புப் படம்
  • Share this:
புதுச்சேரியில் கொரோனா பாதிப்பின் இன்றைய (31ம் தேதி) நிலவரத்தை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் வெளியிட்டுள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் 973 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக 174 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டது.

புதுச்சேரியில் ஒரே நாளில் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை இதுவே அதிகம். புதுச்சேரியில் தற்போது கதிர்காமம் மருத்துவமனையில் 380, ஜிப்மரில் 353, கோவிட் கேர் சென்டர்களில்  286 பேர், வெளிமாநிலத்தில் ஒருவர் என 1020 பேர் நோய் தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காரைக்காலில் 51, ஏனாமில் 73, மாகியில் ஒருவர் நோய் தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் புதுவையில் 136 பேர், காரைக்காலில் 6 பேர் என 142 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


புதுச்சேரியின் 4 பிராந்தியங்களில்  ஒட்டுமொத்தமாக இதுவரை 3,467பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1323 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 2095 பேர்  குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

புதுச்சேரியில் இதுவரை கொரோனாவுக்கு 48 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நேற்று கதிர்காமம் மருத்துவமனையில் முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்த 56 வயதுடைய பெண் கொரோனா தொற்றுடன் கடந்த 23ம் தேதி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

Also read... கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை தமன்னாவை கைது செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு..ரத்த அழுத்தம், சர்க்கரை நோயுடன்  கொரோனாவால் காய்ச்சல், மூச்சுத்திணறலுடன் அவதிப்பட்டு வந்தார். அவர் சிகிச்சைபலனின்றி நேற்று மதியம் உயிரிழந்தார். இதனால் பலியானோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகை வெளியே பணியில் இருந்த தீயணைப்பு துறை காவலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் அவர் நேற்று வரை பணியில் இருந்துள்ளார்.கொரோனா பாதிக்கப்பட்ட நபர் ஆளுநர் மாளிகை வெளியே பணியில் இருந்ததால் ஆளுநர் மாளிகைக்கும் காவலருக்கும் எந்த வித  தொடர்பும் இல்லை என துணைநிலை ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. மேலும் புதுச்சேரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள தீயணைப்பு துறை அடுத்த 48 மணி நேரத்திற்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
First published: July 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading