• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கொரோனா நோயாளிகள், தனிமைப்படுத்தப்பட்டவர்களைக் கண்காணிக்க சென்னை காவல்துறை புதிய முயற்சி

கொரோனா நோயாளிகள், தனிமைப்படுத்தப்பட்டவர்களைக் கண்காணிக்க சென்னை காவல்துறை புதிய முயற்சி

கோப்புப்படம் (PTI)

கோப்புப்படம் (PTI)

கொரோனா நோயாளிகளையும் தனிமைப்படுத்தப்பட்டவர்களையும் கண்காணிக்க காவல்துறை புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது.

  • Share this:
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை சென்னையில் மட்டும் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் அரசு எடுத்து வருகிறது.

கொரோனோ தொற்று ஏற்பட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் சுற்றுவதாக சமீபகாலமாக புகார் எழுந்து வரும் நிலையில், அவர்கள் மூலமாக தொற்று பரவினால் கண்டுபிடிப்பதில் சிரமம் இருப்பதாக அரசு தெரிவித்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் ஒரு வாட்ஸ்அப் குழுவை காவல் நிலைய பெயருடன் கோவிட் 19 என்று தொடங்கியுள்ளனர்.

Also see:

இந்தக் குழுவில் குறிப்பிட்ட காவல் நிலைய எல்லையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை உறுப்பினர்களாக சேர்ப்பர். அதில் மருத்துவமனைகளில் இருப்பவர்கள் எத்தனை பேர், வீட்டு தனிமையில் இருப்பவர்கள் எத்தனை பேர் என வாட்ஸ்அப் மூலம் போலீசார் கேட்டுத் தெரிந்து கொள்வார்கள். அதே வேளையில், வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் அனைவரது செல்போன் எண்களும் சைபர் க்ரைம் மூலம் கண்காணிக்கப்படும், வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் யாரும் வெளியில் சென்றால் சைபர் க்ரைம் போலீசார் அந்தத் தகவலை அந்தப் பகுதி காவல் நிலையத்திற்குத் தெரிவிப்பார்கள்.

இதன்படி கொரோனா தொற்று கொண்டவர்கள், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே வருவது முற்றிலும் குறைக்கப்படும் என்கின்றனர் காவல்துறையினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: