ஊரடங்கு: காவலர்கள் குடிமக்களைத் தாக்கக் கூடாது - கேரள உயர் நீதிமன்ற நீதிபதி

”எந்தச் சூழ்நிலையிலும் அவ்வாறு நடந்துகொள்ள வேண்டாம் என்று அனைத்து அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.”

ஊரடங்கு: காவலர்கள் குடிமக்களைத் தாக்கக் கூடாது - கேரள உயர் நீதிமன்ற நீதிபதி
நீதிபதி தேவன் ராமசந்திரன்.
  • Share this:
ஊரடங்கு விதிகளை மீறினாலும், தெருக்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றவில்லை என்றாலும் காவலர்கள் குடிமக்களைத் தாக்கக் கூடாது என்றும் கேரள உயர் நீதிமன்ற நீதிபதி தேவன் ராமசந்திரன் கூறியுள்ளார்.

கேரள மாநிலத்தின் காவல் தலைமை இயக்குநருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “ஊரடங்கை மீறுவோர் மீது காவல்துறை அதிகாரிகள் தாக்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன. அவர்களுள் கேரளாவைச் சார்ந்தோர் யாரேனும் இருக்கிறார்களா என்பது தெரியவில்லை. எனினும் எந்தச் சூழ்நிலையிலும் அவ்வாறு நடந்துகொள்ள வேண்டாம் என்று அனைத்து அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். முற்றிலும் அத்தியாவசியமான சந்தர்ப்பங்களில் மட்டும் அதிகாரத்தைப் பிரயோகிக்கலாம், அதுவும் தேவையான அளவில் மட்டும்.”

மேலும், காவல்துறையினர் பாதாசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அருகமையில் நிற்பது, பேசுவது, தொடுவது தவறு என குறிப்பிட்ட அவர், பாராட்டத்தக்க பணியை காவலர்கள் செய்து வருகின்றனர், அதேசமயம், அவர்களின் பாதுகாப்பும் ஆரோக்கியமும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்றார்.


Also see:
First published: March 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading