ஊர் திரும்ப முடியாத நிலையில் கணவர்... பிரசவ வலியில் துடித்த பெண்ணைக் காப்பாற்றிய உதவி ஆய்வாளர்!

ஊர் திரும்ப முடியாத நிலையில் கணவர்... பிரசவ வலியில் துடித்த பெண்ணைக் காப்பாற்றிய உதவி ஆய்வாளர்!
காவல் உதவி ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன்
  • Share this:
ஊரடங்கு காரணமாக சென்னையில் கணவர் சிக்கிக்கொண்ட நிலையில் மதுரையில் பிரசவ வலியில் துடித்த பெண்ணை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றியிருக்கிறார் காவல் துறையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் ஒருவர்.

மதுரை தேவி நகர் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். சென்னையில் நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஸ்ரீமதி மதுரை வீட்டில் வசித்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியான ஸ்ரீமதி பிரசவ நாளை நெருங்கிக் கொண்டிருந்த நிலையில் விடுமுறையில் மதுரை வர மணிகண்டன் தயாராக இருந்தார்.

திடீரென ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் சென்னையிலிருந்து மதுரை வர முடியாத நிலை ஏற்பட்டது. தந்தை இல்லாத ஸ்ரீமதி, கணவரின் அரவணைப்பை நம்பியே வாழ்ந்துள்ளார். இந்நிலையில் திடீரென ஸ்ரீமதிக்கு பிரசவ வலி ஏற்பட்டது . தனது கணவரின் உறவினரான முருகேசனுக்கு இதுகுறித்த தகவல் தெரிவித்த நிலையில் ஊரடங்கு காரணமாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வாகனங்கள் கிடைக்கவில்லை.


முருகேசன் அழுதுகொண்டே அருகிலிருந்த காவல் சோதனைச் சாவடி மையத்திற்குச் சென்று விவரத்தைக் கூறியுள்ளார். அங்கிருந்த தெப்பக்குளம் காவல் சார்பு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் உடனடியாக அவருக்கு உதவ முன்வந்தார்.

ஊரடங்கை மீறி அவ்வழியாக வந்த கார் ஒன்றை மறித்து அதற்கு தண்டனையாக சம்பந்தப்பட்ட பெண்ணை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என அந்த பெண்ணின் வீட்டிற்கு காரில் அழைத்துச் சென்றார். அந்தப் பெண்ணை காரில் ஏற்றி சம்மந்தப்பட்ட கார் டிரைவருக்கு டீசல் செலவிற்கு தனது பணத்தை வழங்கி உரிய மருத்துவமனையில் அனுமதிக்கவும் அறிவுறுத்தினார்.

சரியான நேரத்திற்கு அந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். காவல் உதவி ஆய்வாளர் சிவராமகிருஷ்ணனை மாநகர் காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பாராட்டியுள்ளார்.Also see...
First published: March 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading