• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கொரோனாவால் உயிரிழந்த ’108’ உதவியாளர் - நிதி திரட்டி குடும்பத்தினரிடம் வழங்கிய கோவை போலீசார்

கொரோனாவால் உயிரிழந்த ’108’ உதவியாளர் - நிதி திரட்டி குடும்பத்தினரிடம் வழங்கிய கோவை போலீசார்

உயிரிழந்த கணேசன் மற்றும் அவரது குடும்பத்தினர்

உயிரிழந்த கணேசன் மற்றும் அவரது குடும்பத்தினர்

கொரோனா பாதித்து உயிரிழந்த ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளரின் குடும்பத்தினருக்கு, போலீசார் நிதி திரட்டி உதவியுள்ளனர்

  • Last Updated :
  • Share this:
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கணேசன் (22) என்பவர், திருப்பூர் மங்கலம் பகுதியில் தங்கி அவிநாசி பாளையம் பகுதியில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ பணியாளராக பணியாற்றி வந்தார்.

இவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு ஜுன் மாதம் 18-ம் தேதி கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 24ம் தேதி அவர் உயிரிழந்தார். இவரது உடல் திருப்பூர் மாவட்டம் ஆத்துப்பாலம் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் கோவை மாவட்ட போலீசார் கணேசனின் குடும்பத்திற்கு உதவிக்கரம் நீட்டியுள்ளனர். ஆயுதப்படை போலீசார் மற்றும் மாவட்ட போலீசார் இணைந்து சிறிது, சிறிதாக பணம் திரட்டி மொத்தமாக ₹ 1,10,038 சேர்த்துள்ளனர்.




படிக்க: நடிகை வனிதா மீது போலீஸ் வழக்குப்பதிவு

படிக்க: இந்தியாவில் கொரோனா பாதிப்பில் ஒரு லட்சத்தைக் கடந்த 5 மாநிலங்களில் மூன்று தென் மாநிலங்கள்

படிக்க: கமலைப் புறக்கணித்தார்கள்: தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் - பாலிவுட் குறித்து கருணாஸ் ஆதங்கம்








திண்டுக்கல் மாவட்டத்திற்கு நேரில் சென்று உயிரிழந்த கணேசனின் பெற்றோரிடம் போலீசார், இந்த தொகையை அளித்தனர். போலீசாரின் இந்த உதவி, பாராட்டுக்களை பெற்றுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar A
First published: