கொரோனா பாதிப்பு: கர்நாடகாவில் இரவு ஊரடங்கை மீறி சுற்றித் திரிந்தவர்களை அடித்து விரட்டிய காவல்துறை

மாதிரி படம்

கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய நபர்களை போலீசார் லத்தியால் தாக்கி விரட்டி அடித்தனர்.

 • Share this:
  நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதை அடுத்து டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரகண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பொதுமக்கள் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கர்நாடக மாநிலம் குல்பர்கி பகுதியில் பொதுமக்களின் நடமாட்டத்தை தடுக்க போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

  அப்போது அரசின் விதிகளை மீறி தேவையின்றி இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்தவர்களை போலீசார் லத்தியால் தாக்கி, எச்சரித்து அனுப்பினர். இரவு நேரத்தில் அவசர தேவையின்றி வெளியே வரவேண்டாம் என ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தினர்.

  கர்நாடகா மாநிலம் மைசூருவில் இரவு நேரங்களில் பொதுமக்கள் நடமாடுவதை தடுக்க குதிரைகள் மூலம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் இரவு முழுவதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருடனும் இணைந்து மாவட்ட ஆட்சியர் ஆஷிஸ் ஸ்ரீவஸ்தா ஆய்வு செய்தார். தலைநகர் டெல்லியில் உள்ள கனகாட் பகுதியில் இரவு முழுவதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரவு ஊரடங்கை மீறி வெளியே சுற்றியவர்களை நபர்களை பிடித்து போலீசார் விசாரித்து எச்சரித்து அனுப்பினர்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: