• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கொரோனாவிலிருந்து மீண்டு வந்த காவல் உதவி ஆணையருக்கு மேள தாளம் முழங்க வரவேற்பு

கொரோனாவிலிருந்து மீண்டு வந்த காவல் உதவி ஆணையருக்கு மேள தாளம் முழங்க வரவேற்பு

காவல்துறை உதவி ஆணையருக்கு  மேளம்தாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது

காவல்துறை உதவி ஆணையருக்கு  மேளம்தாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது

கொரோனாவிலிருந்து மீண்டு வந்த நுங்கம்பாக்கம் காவல்துறை உதவி ஆணையருக்கு  மேளம்தாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

  • Share this:
சென்னை நுங்கம்பாக்கம் காவல்துறை உதவி ஆணையர் முத்துவேல்பாண்டி கடந்த 3-ம்தேதி கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வந்தார். பிறகு வீட்டிலேயே தனிமைபடுத்தப்பட்டு இருந்தார். இன்று பூரண குணமடைந்து உதவி ஆணையர் முத்துவேல் பாண்டி பணிக்கு திரும்பினார்.

நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் உள்ள அலுவலகத்திற்கு வந்த அவருக்கு சென்னை தெற்கு மண்டல காவல்துறை கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, காவல்துறை இணை ஆணையர் சுதாகர், திருவல்லிக்கேணி துணை ஆணையர் தர்மராஜன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

நுங்கம்பாக்கம் காவல் நிலைய காவலர்கள் உதவி ஆணையருக்கு மலர் தூவி கைதட்டி வரவேற்றனர். செண்டை மேளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

பூசனிக்காய் சுற்றி வரவேற்ப்பு


மேலும் அந்த பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்கள் உதவி ஆணையர் முத்துவேல் பாண்டிக்கு சால்வை, மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

Also read... வெளிநாட்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க இதுவரை 50 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளது - நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்

சென்னை காவல்துறையில் இதுவரை 931 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 362 பேர் பூரண குணமடைந்து பணிக்கு திரும்பி உள்ளனர் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: