கொரோனாவுக்கு எதிரான போரைத் தீவிரப்படுத்த வேண்டும் - ராமதாஸ்

கொரோனாவுக்கு எதிரான போரைத் தீவிரப்படுத்த வேண்டும்என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார். 

கொரோனாவுக்கு எதிரான போரைத் தீவிரப்படுத்த வேண்டும் - ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ்.
  • Share this:
பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று கொரோனா வைரஸ் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் நேற்று ஒரு நாளில் மட்டும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6472 என்ற புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது. சென்னையிலும் புதிய கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 17 நாட்களுக்குப் பிறகு முதன்முறையாக 1300 என்ற எண்ணிக்கையைக் கடந்துள்ளது. கொரோனா ஒழிப்பில், தமிழகம் முழுவதும் தீவிரம் காட்டப்பட வேண்டும் என்பதையே இது காட்டுகிறது.

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 7-ஆம் தேதி தான் முதல் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் இரு மாதங்கள் கழித்து மே 7ஆம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் ஒட்டுமொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 5,409 என்ற அளவில் தான் இருந்தது. ஆனால், இரு மாதங்களில் ஏற்பட்ட தொற்றுகளின் எண்ணிக்கையை விட ஆயிரத்திற்கும் அதிகமாக தொற்றுகள் நேற்று ஒரே நாளில் ஏற்பட்டுள்ளன.

நோய்த் தொற்றுகள் எந்த அளவுக்கு அதிகமாக கண்டுபிடிக்கப்பட்டாலும், அது பற்றி கவலைப்படத் தேவையில்லை; அது நோய் பாதித்தவர்களைக் கண்டுபிடித்து, சிகிச்சையளித்து அதன் மூலம் நோய்ப்பரவலை கட்டுப் படுத்துவதற்கான நடவடிக்கைகளின் ஓர் அங்கம்தான் என்று உலக சுகாதார நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்குழுவும் கூறுகின்றன.


அதேபோல், தமிழகம் முழுவதும் நோய்த் தாக்க விகிதமும் கட்டுக்குள் தான் உள்ளது. தமிழ்நாட்டில் நேற்று செய்யப்பட்ட சோதனைகளின் எண்ணிக்கை 62,112 ஆகும். இதில் நோய்த்தொற்று கண்டறியப் பட்டவர்களின் எண்ணிக்கை 6472 ஆகும். இதனடிப்படையில் நோய்த்தாக்க விகிதம் 9.59 விழுக்காடு என்ற அளவில் பத்துக்கும் குறைவாகவே இருப்பதால் அச்சப்பட வேண்டிய தேவையில்லை. இந்த புள்ளி விவரங்கள் மனநிறைவு அளித்தாலும் கூட, நாம் நினைத்தால் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம்.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் மொத்தம் 113 கொரோனா ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சளி மாதிரி எடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நடமாடும் சளி மாதிரி மையங்களும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் கொரோனா ஆய்வு செய்து கொள்ள எந்தக் கட்டணமும் இல்லை. இவ்வளவுக்குப் பிறகும் ஆய்வு செய்து கொள்ளாத பலர், கொரோனாவை பரப்பி சமுதாயத்திற்கு பெரும் கேடு இழைக்கின்றனர்.

தேவையின்றி வெளியில் செல்லக்கூடாது.கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். கைகளை சோப்புப் போட்டு கழுவ வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு, தமிழக அரசு ஆகியவை ஆலோசனைகளை வழங்கியும் சென்னை போன்ற நகரங்களில் பெரும்பான்மையினர் அதை கடைபிடிப்பதில்லை.கொரோனாவுக்கு எதிரான போரை மக்கள் தீவிரப்படுத்த வேண்டும். கொரோனா பரவலைத் தடுக்க அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். அதன்மூலம் கொரோனா வைரஸ் பரவலை முற்றிலுமாக ஒழிக்கும் பணிகளுக்கு துணை நிற்க வேண்டும்.

மேலும் படிக்க...

தொடர்ந்து புதிய உச்சம் தொடும் தங்கம் விலை - உயர்வுக்கு காரணம் என்ன?

தமிழக அரசு ஜார்க்கண்ட் மாநிலத்தில் முகக்கவசம் அணியாவிட்டால்  ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதைப் போன்று, தமிழகத்திலும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வர வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
First published: July 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading